சென்னை: சமூக மாற்றத்திற்கான அமைப்பாகச் செயல்பட வேண்டி இருப்பதால் சாதி மத இனக்கலவரங்களை, புலம்பெயர்ந்திருக்கும் பிற மாநிலத்தவரின் பிரச்சனைகளை எல்லாம் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம் . சென்னை மாவட்ட இஸ்கஃப்–ன் துணைத்தலைவராக இருக்கும் வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணகுமார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தேர்தலில் செயலாளராகப் போட்டியிடுவதை இஸ்கஃப் அமைப்பு வரவேற்று அவருக்கு முழு ஆதரவு நல்கிவாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது என சென்னை மாவட்ட இஸ்கஃப்–ன் தலைமை குழு உறுப்பினரும், துணைத் தலைவருமான வழக்கறிஞர் கே. தேசிங் பேசினார். இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் சென்னை மாவட்ட பொதுக்குழு கூட்டம் டிச. 18 அன்று சென்னைதியாகராய நகர் பாலன் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் கே.தேசிங்தலைமை ஏற்று வழிநடத்தினார். செயலாளர் பா. செந்தில்குமார் வரவேற்று பேசினார். பொருளாளர் எஸ். ஆர்.மாதவன் ஒருங்கிணைத்தார்.
துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி ,ரேணுகா தாமஸ், திருஞானசம்பந்தம், மு. சீனிவாசன், பாரி , ஜி. காமாட்சி , ராஜவேலு மற்றும் வழக்கறிஞர் மோகன், பத்திரிகையார்கள் வெங் கடேசன், ராஜன், அருண் உள்ளிட்ட பலரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துரைத்துப் பேசினர்.
இஸ்கஃப் அமைப்பு மக்கள் பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்ட அமைப்பாகச் செயல்பட வேண்டி இருக்கிறது. வலுவான எதிர்ப்பு சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டி இருப்பதால், ஒற்றுமையுடன் அனைவரும்ஒத்துழைக்க வேண்டும் என செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
கூட்டத்துக்கு தலைமை ஏற்று பேசிய வழக்கறிஞர் கே.தேசிங் பேசியதாவது: நமது அமைப்பு சந்திக்கவேண்டிய பிரச்சனைகள் நிறைய உள்ளது. சாதி மத இனக் கலவரங்கள், புலம்பெயர் ந்து வந்துள்ள பிறமாநிலத்தோரின் பிரச்சனைகள் எல்லாம் மிகப்பெரிய சவால்களாக உள்ளன. சமூக மாற்றத்துக்கானசெயல்பாடுகளாக அவற்றை மேலெடுத்து ஒருங்கிணைந்த கூட்டு செயல்பாடுகளால் அவற்றை எதிர்கொள்ளவேண்டிய கட்டாய நிலைமை நம் முன் உள்ளது எனப் பேசினார்.இஸ்கஃப்–ன் துணைத் தலைவராக இருக்கும்வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணகுமார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர் தலில் செயலாளராகபோட்டியிடுவதை இஸ்கஃப் அமைப்பு வரவேற்று, அவருக்கு முழு ஆதரவு நல்கி, அவரது வெற்றிக்குவாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.இஸ்கஃப் வளர்ச்சிக்கான உறுப்பினர் சேர்க்கையைவேகப்படுத்த வேண்டும். கிளை அமைப்புகள், வட்டார அமைப்பு கள் மாவட்ட பொறுப்பாளரின் வழிகாட்டுதலோடு இணைந்து செயல்பட வேண்டும் . அதற்காக வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னைபொறுப்பாளராக ஆர் .ராஜவேலு, வரதன் , ஜி .காமாட்சி உள்ளிட்டவர் களைப் பொறுப்பாளர்களாகத் தேர்வுசெய்திருக்கிறோம்.அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் கருத்தரங்கம் டிச. 22-ல் சென்னைகேரள சமாஜத்தில் நடைபெறுகிறது. அதில் இஸ்கஃப் அமைப்பினர் திரளாகக் கலந்து கொள்ளவேண்டும்..மார்க்சியப் பேராசான் ஜீவா நினைவு தினம் ஜன.18, தோழர் ராஜ்மோகன் நினைவேந்தல் தினம்ஜன.30, தாய்மொழி தினம் பிப்.20 வருவதால் அந்நாட்களைச் சிறப்பு நிகழ்ச்சிகளாகக் கொண்டாடஇருக்கிறோம் .அகில இந்திய இஸ்கஃப் தேசிய மாநாடு ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 13 பேர் தலைமை குழு உறுப்பினர், தேசிய துணைத் தலைவர்கள், நிர்வாக குழு, தேசியகுழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சென்னை மாவட்ட குழுவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது..ஜீவா மணிமண்டபம் அமைத்திட நன்முயற்சிகளை மேற்கொண்டதமிழக அரசுக்கு இஸ்கஃப் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என மாவட்ட செயலாளர் செந்தில் குமார்கூறினார்.