கோட்டயம் கிழக்கு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த பி.என். சன்னி சினிமா நடிகரானது சுபாரஸ்யமானது. பத்ரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற படம் “ஸ்படிகம்“. இப்படத்தில் மோகன்லாலுக்கு சவால் விடும் பயில்வான் போன்ற உடல்வாகுள்ள நடிகரை தேடியிருக்கிறார் இயக்குனர். அந்தசமயத்தில் தான் அதில் முக்கிய வில்லனாக நடித்த ஜார்ஜ், அன்றைய மிஸ்டர் கேரளா பட்டத்தில் 2- ம் பரிசுபெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் சன்னியை பற்றி சொல்ல.. டைரக்டரின் ஒரே பார்வையில் ஓக்கே ஆனார்பெருச்சாளி பாஸ்டின் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி மலையாள மக்களின் மனதில் நீங்காஇடம்பெற்றார் விஷாலின் ” லத்தி” பட இயக்குனர் வினோத் குமார் கண்ணில் பட அப்படத்தில் வில்லனாகரமணாவின் அப்பா வேடத்திற்கு தேர்வானார்.*******
அதன் பிறகு நிறைய மலையாள படத்தில் பரபரப்பாக நடித்து வருகிறார். முதல் படத்திலேயே இவர் பெருச்சாளிபாஸ்டின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ” *ஜோஜி* ” என்ற படத்தில் பஹத் ஃபாசிலின் தந்தையாகநடித்து அசத்தியது படம் ரிலீசாகி இன்று *சன்னி* யின் கதாபாத்திரமும் , அவரது தோற்றமும் நடிப்பும்ரசிகர்களையும் சினிமா வட்டாரங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அன்று மோகன்லால் வில்லனாகஅறிமுகமானவர் இன்று விஷாலுக்கு வில்லனாக கேரளா எல்லையை தாண்டியுள்ளார். நல்ல வாய்ப்புகள்அமைந்தால் தமிழ் – தெலுங்கு படவுலகிலும் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளார் *P.N.சன்னி.