விருந்து இலையில் ஊருகாயை மட்டுமே பரிமாறிய “ஓ மை கோஸ்ட்” படம்

சன்னி லியோன் சதீஷ் யோகிபாபு ரவிவர்மா நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மை கோஸ்ட்“. விருந்துஇலையின் ஓரத்தில், நாக்கில் தடவிக் கொள்ள சிறிதளவு ஊறுகாய் துண்டை வைத்திருப்பார்கள். ஊறுகாய்துண்டை போலத்தான் ஒரு படத்தில் சிற்றின்பச் சொருகல் இருக்க வேண்டும். இப்படத்தில் இலை முழுவதிலும் ஊறுகாயை நிரப்பி இருக்கிறார்கள். கதையின் கருவே அதுதான். சிற்றின்பத்தை வசனத்திலும் பின்னணி இசையிலும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். கவர்ச்சி இல்லாமல் சன்னி லியோன் ஆடுவது ரசிக்கும்படி உள்ளது. சன்னி லியோனின் அனகொண்டாபுர கோட்டையை, பாகுபலி மகிழ்மதி கோட்டைக்கு இணையாகஅமைத்திருக்கும் கலை இயகுனர் பாராட்டுக்குறியவர். ஹாலிவுட் தரத்திற்கு ஒளிப்பதிவு குளிர்ச்சியை தருகிறது. கத்தி சண்டையில் சன்னி லியோனின் துள்ளல் அபாரம்.