இந்தியாவிலேயே தமிழ்நாட்டிக்குதான் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் முதலியார்குப்பம் படகுகுழாம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால்செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முதலியார்குப்பம் படகுகுழாமினை செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.பாபுஅவர்கள், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர். திரு.சந்தீப் நந்தூரி, ..., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகுசுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் (31.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலியார்குப்பம் படகு குழாமில் இருந்துஇயந்திரப்படகு மூலம் 4 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளகடற்கரைத் தீவுக்கு சென்ற மாணபுமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் கடற்கரைத்தீவில்சுற்றுலா பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படைவசதிகள் குறித்து பார்வையிட்டு அலுவலர்களுடன் ஆய்வுசெய்தார், கடற்கரைத்தீவிற்கு இயந்திரப் படகு மூலம் வருகைதந்த பொதுமக்களிடம் படகு பயணம் குறித்தும், குழந்தைகளிடம் சுற்றுலா அனுபவம் குறித்தும்கலந்துரையாடினார்.

பின்னர் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள்செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்ததாவது,

          இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விடதமிழ்நாட்டிக்குதான் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும்உள்நாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி வருகைதருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள் அதிகஅளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளைகவர்ந்து உள்ளதால், ஆண்டுதோறும் வருகை தரும்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகின்றது.

          தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலாப்பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், படகு குழாம்களை முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், கோவை மாவட்டம் வாலாங்குளம் மற்றும் குற்றாலம், ஆகிய 9 இடங்களில் செயல்படுத்தி வருகின்றது

முதலியார்குப்பம் படகு குழாமானது, சென்னையிலிருந்து 92 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரத்திற்கு தெற்கே 36 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த படகு குழாம் “மழைத்துளி படகு குழாம்” என்றும் அழைக்கப்படுகிறது. முதலியார்குப்பம் மிகவும் இயற்கையான சூழலில் அமையப்பெற்று, பறவைகளைப் பார்வையிடுவோர்களின் சொர்க்கமாகவும் மற்றும் சுற்றுலாப் பயணிகள் புத்துணர்வு பெறும் தலமாகவும் விளங்குகிறது.  

  ஓடியூர் ஏரியை ஒட்டியுள்ள வண்ணமயமான கடற்கரை தீவிற்கு இயந்திர படகு மூலம் சென்று வர ஏற்பாடு செய்து தரப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகள் இந்த தீவில் சில மணி நேரம் தங்கி இயற்கை சூழலை கண்டுகளிக்க வசதி உள்ளது,இந்த படகு குழாமின் சிறப்பம்சமாகும். படகில் பயணிக்கும் பொழுது, புலம்பெயர் பறவைகளை கண்டுகளித்தும் மற்றும் படகு குழாம்  உணவகத்தில் சுவையான கடல் உணவுகளை உண்டு சுவைத்தும் மகிழலாம்.  நீர் விளையாட்டு வசதிகள் கொண்ட முதலியார்குப்பம் படகு குழாமில் விசைப்படகு, மிதிப்படகு, ஓரிருக்கை படகு (Kayak), வாழைப்பழ வடிவிலான படகு, வாட்டர் ஸ்கூட்டர், இயந்திர படகு மற்றும் அதிவேக ஜெட் ஸ்கி (Jet Ski) போன்ற படகுகள் உள்ளன.மேலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வண்ணம், சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் விளையாட்டுகள் அமைக்கப்பட்டு முதலியார் குப்பம் படகு குழாமானது தனித்துவமான பொழுதுபோக்கு தலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

முதலியார்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகளின்வசதிக்காக ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள்தெரிவித்தார்இந்த நிகழ்ச்சியில் இடைக்கழிநாடுபேரூராட்சித்தலைவர் திருமதி.சம்யுக்தா, தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக மண்டல மேலாளர் திரு.முரளி, சுற்றுலாஅலுவலர் திரு.சக்திவேல் உள்பட அரசு அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.