தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு, இ.கா.ப., இன்று (10.01.2023) காலை, செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட வளைவினை திறந்து வைத்து, இவ்வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அங்கு நடைபெற்று வரும் 23ஆவது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியின் (AIPDM) நேற்று (09.01.2023) நடைபெற்ற துப்பாக்கி சுடும் பிரிவுகளில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும், அங்கு நடைபெற்று வரும் போட்டியை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார்.