துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்துள்ள காதல், ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார். பிப்ரவரி 28 அன்று வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இச்சந் திப்பில் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் பேசியது… இந்தப்படத்திற்கு பின்னணி இசை மற்றும் ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன். உங்களுக்கு மிக பிடிக் கும் என நம்புகிறேன். வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இயக்குநர் தேசிங்கு பெரியசாமி பேசியது… இது எனக்கு முதல் மேடை. பத்திரிக்கைகள் தான் என்னை முதலில் அறிமுகப்படுத்தியது. படம் அறிவித்த போதே என் பெயர் இயக்குநர் என வந்துவிட்டது. எல்லா அறிமுக இயக்குநரும் பட்ட கஷ்டங்களை பட்டே இந்தப்பட த்தை நானும் இயக்கினேன். துல்கரை மட்டுமே மனதில் வைத்து இந்தப்படத்தின் கதையை எழுதினேன். அவர் வந்துவிட்டதால் இந்தப்படத்தின் மீது மற்றவர்களுக்கு பெரிய நம்பிக்கை வந்துவிட்டது. பெல்லி சூப்புலு பார்த்து ரிது வர்மாவை இந்தப் படத்தில் நடிக்க வைத்தோம். அருமையாக நடித்திருக்கிறார். கௌதம் சார் நினைத் தால் மிகப்பெரிய படங்களில் நடிக்கலாம் ஆனால் என்னை நம்பி ஒரு அறிமுக இயக்குநருக்கு உதவியாக இருக்குமென்றே அவர் நடித்திருக்கிறார். அவர் இந்தப் படத்தில் அசத்தியிருக்கிறார். துல்கர் எந்த தலையீடும் இல்லாமல், எந்த ஈகோவும் இல்லாமல், அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடித்து தந்தார். கால் உடைந்த மிக கடின மான நேரத்திலும் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்தார். எனது படக்குழு என் மீது மிக வும் அன்பானவர்கள். எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் உழைத்த என் உதவி இயக் குநர்களுக்கு நன்றி. இந்தப்படத்தில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது. உங்களுக்கு பிடிக்கும். பட ரிலீஸுக்கு பிறகு மீண்டும் பேசுவோம் நன்றி.