விக்ரம் பிரபு – வாணி போஜன் நடித்த படம் “பாயும் ஒளி நீ எனக்கு ”

எஸ்.பி. சினிமாஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின்  நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமானபாயும் *ஒளி*  நீ எனக்கு”. இப்படம் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது.கார்த்திக் அத்வைத் இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். அதோடு, தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக் மூவி ஹவுஸுக்காக இந்தப் படத்தை எழுதி, இயக்குகிறார். மேலும் அவரது அடுத்த படம் கன்னட நடிகர் டாக்டர்.சிவராஜ் குமாருடன்அமையவிருக்கிறது. சிவராஜ் குமார், தற்போது ரஜினிகாந்த்  உடன் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த படத்தில் ஆனந்த், விவேக்பிரசன்னா, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.******************

பிரமாதமாக வழங்கப்பட்ட இந்த படத்தின் ஆக்‌ஷன் டீஸர், அதன் நேர்த்தியான காட்சிகள் மற்றும் படத்தொகுப்புகள், அட்டகாசமான இசை மற்றும் விக்ரம் பிரபுவின் சிறந்த திரை ஈர்ப்பு ஆகியவை , படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்கனவே உயர்த்தியுள்ளதுகன்னட திரைதுறையின் மிகவும் பிரபலமான நடிகர் டாலி தனஞ்சயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.  அவரது அதிரடி காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் வகையில் அமைந்துள்ளன .

பிரபல இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் சாகர் மஹதி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அவர் ஏற்கனவே தெலுங்குத் துறையில்  பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார் . “பாயும் *ஒளி*  நீஎனக்குதிரைப்படம் தமிழ்த் துறையில் அவரது இசை அறிமுகத்தைக் குறிக்கிறது. ‘பரியேறும்பெருமாள்புகழ் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சி.எஸ்.பிரேம் குமார் படத்தொகுப்பைகவனிக்கிறார். பி.எல். சுபேந்தர் (கலை இயக்குனர்), தினேஷ் காசி (ஸ்டன்ட் இயக்குனர்), மற்றும்ராஜகிருஷ்ணன் – 4 Frames (ஒலி கலவை), சதீஷ் – AIM (PRO) ஆகியோர் படத்தின் மற்ற முக்கியதொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றுகின்றனர்.

SP சினிமாஸ் நிறுவனம் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் டீசல்  என்ற திரைப்படத்தைதயாரித்து வருகிறது. மேலும் SP சினிமாஸ்,  K13 (அருள்நிதி), மாறா (மாதவன்), மனபெண்ணே(ஹரிஷ் கல்யாண்) போன்ற தனித்துவமான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டதிரைப்படங்களைத் தயாரித்துள்ளது. . SP சினிமாஸ் சிறந்த உள்ளடக்கம் கொண்ட பல வெற்றிபடங்களை விநியோகித்துள்ளது, அதில் அசோக் செல்வன் நடித்த வேழம் மற்றும் தேசிய விருது பெற்றதமிழ் திரைப்படமானபாரம்ஆகியவை  குறிப்பிடத்தக்கவை.