நடிகர் விஷ்ணு விஷால் – இயக்குநர் ராம்குமார் இணையும் புதிய திரைப்படம் 

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், தியாகராஜன் 20 க்கும் மேற்பட்ட மாநில அரசு வென்ற படங்கள் மற்றும் 4 தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்துள்ளார்.  இந்நிலையில், தற்போது நடிகர் விஷ்ணுவிஷால் மற்றும் திரைப்பட இயக்குநர் ராம் குமார் ஆகியோரின் கூட்டணியில் தங்களது அடுத்த தயாரிப்பை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் அறிவித்துள்ளது. இந்த ஜோடி முன்னதாக முண்டாசுப்பட்டிமற்றும்ராட்சசன்ஆகிய படங்கள் மூலம் விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைக் குவித்துள்ளது. இவர்களது முந்தைய திரைப்படங்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்தது. முற்றிலும் புத்தம் புதிய களத்தில் புதுமையான திரைக்கதையில் அசத்திய  ‘ராட்சசன்படம் இந்தியாவெங்கும் பல மொழிகளில் மறுபதிப்பு செய்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.*************

நடிகர் விஷ்ணு விஷால் எஃப்ஐஆர் மற்றும் கட்டா குஸ்தி உள்ளிட்ட தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம்வெற்றிகரமான நாயகனாக வலம் வருகிறார்.  தொடர் வெற்றியைத் தரும் திரைப்படங்களைத் தருவதன்மூலம், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களால் மிகவும் மதிப்புமிக்க நட்சத்திரமாகப் பாராட்டப்படுகிறார் .

இயக்குநர் ராம் குமார் திரையில் தனித்துவமான உள்ளடக்கத்துடன் கூடிய திரைக்கதைகளைப் படைத்துவெற்றி பெற்றுள்ளார். அவரது முதல் இயக்கமான  ‘முண்டாசுப்பட்டிநகைச்சுவை திரைப்படமாகஇருந்தபோதிலும், அவர் தனது இரண்டாவது திரைப்படமானராட்சசன்மூலம் அனைவரையும்ஆச்சரியப்படுத்தினார், அப்படம் இதயத்தை அதிரச்செய்யும் உளவியல் திரில்லராக அசத்தியது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் அவர்களின் பழைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேறு வகை ஜானரில்ஒரு புதிய படைப்பை உருவாக்குவதில் இந்த கூட்டணியுடன் இணைவதில் சத்யஜோதி ஃபிலிம்ஸ்மகிழ்ச்சி கொள்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம், பெரிய பட்ஜெட்டில் நகைச்சுவையுடன் கூடிய காதல்கதையை ஃபேண்டஸி கலந்து சொல்லும் படமாக இருக்கும். இந்த வெற்றிகரமான காம்போவின் இரண்டுபடங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், இந்த படம் அதன் ஹாட்ரிக் ஸ்பெல்லை நிறைவு செய்யும்என்பது உறுதி. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன்மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாகவிரைவில் வெளியிடப்படும்.