பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான படம் “அயலி”

குஷ்மாவதி தயாரிப்பில் ஜீ5.வலைதளத்தில் வெளிவந்திருக்கும் படம் “அயலி”. புதுப்பேட்டை மவாட்ட வீரபண்ணை கிராமத்தினர் “அயலி” என்ற பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். அந்த கிராமத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால், உடனே படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொள்ளவேண்டும். இல்லை என்றால் குல தெய்வத்தின் கோபத்துக்கு ஆளாகி, கிராமம் அழிந்துவிடும் என நம்புகிறார்கள். அந்த கிராமத்தில் தமிழ் செல்வி என்ற சிறுமி நன்றாக படித்து டாக்டராக வேண்டுமென விரும்புகிறாள். அதற்காக வயதுக்கு வந்ததையே இரண்டு ஆண்டுகளாக மறைத்து பள்ளிக்கு சென்று படித்து வருகிறாள். அவளது ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதை 8 எபிசோடுகளாக ஜீ5. வலைத்தளம் வெளியிட்டு வருகிறது. பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இப்படம் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார் இயக்குநர் முத்துக்குமார். வீண மைந்தனின் வசனம் கைத்தட்ட வைக்கிறது. தமிழ் செல்வியாக நடித்திருக்கும் அபிநயஶ்ரீ, “பாரதி கண்ட புதுமைப் பெண்”ணாகவே மிளிர்கிறார். ************