குஷி’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம்குஷி‘. இதில் விஜய் தேவரகொண்டா கதையின்நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர் சிவ நிர்வானாநடிகர்விஜய் தேவரகொண்டா – ‘ ஹிருதயம்படம் புகழ் இசைமைப்பாளர் ஹேஷாம் ஆகியோர் அண்மையில்முக்கியமான சந்திப்பு ஒன்றினை நடத்தி, விரிவாக விவாதித்தனர்இதனைத் தொடர்ந்துகுஷிபடத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவது என்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.*********

இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள படத்தின் நாயகியான நடிகை சமந்தாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும்  குஷிபடத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புவிரைவில் தொடங்குகிறது. இதனைகுஷிபடத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிமேக்கர்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் தொடர்பான தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.