சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மலேசியாவிலிருந்து வந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தனர். அப்போது அவர் தனது பையில் ரூ.1.13 கோடி மதிப்பிலான 2200 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததைகண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மற்றொரு சம்பவத்தில் துபாயில் இருந்து நேற்று வந்த ஒருவரை சுங்கத்துறையினர் சோதனைமேற்கொண்டனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் ரூ. 19.65 லட்சம் மதிப்பிலான 383 கிராம்எடையுடைய தங்கம் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
அதேபோல், தோஹாவில் இருந்து நேற்று வந்த ஒரு நபரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் தனது பையில் ரூ.70.28 லட்சம் மதிப்புடைய 1370 கிராம்தங்கத்தை மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். அப்பயணி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில்விடுவிக்கப்பட்டார்.
இந்தத் தகவலை சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் திருமேத்யூ ஜாலி தெரிவித்தார்.