தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், ஜெயராமபுரத்தில் (18.02.2023) சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலையின் படைத்தளபதியான மாவீரர் பொல்லான்அவர்களுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமையவுள். இடத்தினை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாநிலங்களவை உறுப்பினர்வ். அந்தியூர்.ப.செல்வராஜ் முன்னிலையில் பார்வையிட்டார்.
மாவீரர் பொல்லான் அவர்களுடைய வாழ்க்கை வரலாறுஎன்பது, நாட்டிற்கு மிகப்பெரிய தியாகம் செய்த தியாகியாகஉள்ளார். மூன்று பெரிய போர்களிலே தீரன் சின்னமலைஅவர்களோடு இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்துமிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது ஆங்கில அரசாங்கம், அவர்களுடைய படை என்ன மாதிரியானநடவடிக்கை எடுக்கிறது, என்னென்ன திட்டங்களை அவர்கள்வகுக்கிறார்கள் என்பதை எல்லாம் பொல்லான் அவர்கள்எப்படியோ அறிந்து தான் தீரன் சின்னமலை அவர்களிடத்திலேஅதை தெரிவித்து, அவர்களுடன் இணைந்து, அந்த வெற்றியைபெறுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருந்தவர் மாவீரர்பொல்லான் அவர்கள் ஆவர்.
மேலும், மாவீரர் பொல்லான் அவர்களின் வாழ்க்கைவரலாற்றினை இன்றைய சந்ததியினர் அறிந்திடும் வகையில்மொடக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட, வடுகப்பட்டி இ கிராமம், ஜெயராமபுரத்தில் தமிழ்நாடு பூமிதான வாரியம், சென்னைக்குசொந்தமான சுமார் 0.16.6 ஹெக்டேர் (41.00) சென்ட்பரப்பளவில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கானஇடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான இடம் புலத்தணிக்கைமேற்கொண்டு சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்காகமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அரசிற்கு கருத்துருஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயராமபுரத்தில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான தேர்வு செய்யப்பட்ட இடத்தினை மாண்புமிகுசெய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்அலுவலர்களுடன் சென்று பார்வையிட்டார்.
வட்டாட்சியர் இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி வருவாய்திரு.சண்முகசுந்தரம், அறச்சலூர் பேரூராட்சி தலைவர்திரு.விஜயகுமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.