சென்னை விமான நிலையத்தில் சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான குறுகிய கால மின்னணு ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது

சென்னை, பிப்ரவரி 21, 2023

சென்னை விமான நிலையத்தில் வணிக நிறுவனங்களைத் தொடங்க மிகச் சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் முதல் கட்டத்தின் உள்ள டி1, டி3, டி4 மற்றும் டி2 பகுதிகளில் சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்க குறுகிய கால மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளை (இ-டெண்டர்) 21.02.2022 அன்று சென்னை விமான நிலையம் கோரியுள்ளது.

ஒவ்வொரு நாளும் 60,000 க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்லும் இந்த விமான நிலையத்தில் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான வாய்ப்புகளை இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு ஏற்படுத்தி தந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஏலதாரர்கள் குறிப்பிட்ட இடத்தில் 6 மாதங்கள் வரை விற்பனை நிலையங்களை அமைக்க முடியும். இது மேலும் 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. தோல் பொருட்கள், பைகள், அணிகலன்கள், கண் கண்ணாடிப் பொருட்கள், ஆயுர் வேதப் பொருட்கள், நுகர்வோர் மின்னணுப் பொருட்கள், காலணிகள், பொம்மைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடைகளை அமைக்கலாம். ஒப்பந்தப் புள்ளிக்கான விண்ணப்பங்களை 27.02.2023மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://etenders.gov.in/eprocure/app என்ற இ-டெண்டர் இணைய தளத்தையோ  அல்லது விமான நிலையங்கள் ஆணையத்தின் www.aai.aero.என்ற  இணைய தளத்தையோ பார்க்கலாம்.