சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்(ஐஐடி மெட்ராஸ்) , பொதுத்துறை நிறுவனமான ஜெனரல்இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC Re)-வுடன் இணைந்து, சிறுநீர் அடிப்படையிலான காசநோய்கண்டறிதல் அல்லது பரிசோதனையை உருவாக்கஉள்ளது.
பல்வேறு நோய்களைக் கண்டறிய தற்போதுபயன்படுத்தப்பட்டு வரும் ரத்த குளுக்கோஸ்மானிட்டர்கள் போன்ற; பாயிண்ட் ஆப் கேர்; கருவிகளைக் காட்டிலும், புதிதாக உருவாக்கப்பட உள்ளசிறுநீர் அடிப்படையிலான காசநோய் பரிசோதனைக்கருவி விரைவாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும்என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப்இந்தியா-வின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வுநிதியில் இருந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் மத்திய- மாநில அரசுகளின் சுகாதாரத் துறைகளும்முதன்மை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை சுகாதாரமையங்களும் பயன்பெறும்.
இந்த கூட்டுமுயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும்கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலாமற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப்இந்தியா (GIC Re) இயக்குநரும் பொதுமேலாளருமானதிருமதி மதுலிகா பாஸ்கர் ஆகியோர் கடந்த 10 பிப்ரவரி2023 அன்று கையெழுத்திட்டனர். பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் 180-க்கும் மேற்பட்டநிறுவனங்களிடம் இருந்து தற்போது வரை ரூ.250 கோடிதிரட்டப்பட்டு உள்ளது. இதனைக் கொண்டு 200- க்கும்அதிகமான கூட்டு முயற்சித் திட்டங்களில் ஐஐடிமெட்ராஸ் ஈடுபட்டுள்ளது.
சமூகப் பயன்பாட்டுடன் கூடிய இத்திட்டத்திற்கு உதவும்; ஜிஐசிரீ; நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துப் பேசிய ஐஐடிமெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர் மற்றும் கார்ப்பரேட்உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா கூறுகையில், காசநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும்முக்கியமான இத்திட்டத்தில் ஜிஐசி எங்களுடன் கூட்டுச்சேர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்; எனக் குறிப்பிட்டார்.
நாட்டின் மிகப் பரவலான தொற்றுநோய்களில் ஒன்றானகாசநோய்க்கு 2025-ம் ஆண்டுக்குள் முற்றுப்புள்ளிவைக்க (End TB) இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துஉள்ளது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய்காரணமாக இந்த முயற்சிகள் தடைபட்டுள்ளன. காசநோய் பரவாமல் கட்டுப்படுத்த அதனை சரியானநேரத்தில், விரைவான மற்றும் அணுகக் கூடிய முறையில் கண்டறிவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஜென்எக்ஸ்பர்ட் (GeneXpert), செல்வளர்ப்பு போன்றதற்போதைய நுட்பங்களைப் பொருத்தவரை அவை வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பைக் கொண்டவை. தவிர கூடுதல் செலவு பிடிப்பதுடன், பரிசோதனைக்குஒருவாரமோ அல்லது இரு வாரங்களோ ஆகின்றன.
விரைவான, உணர்திறன் மிக்க இந்த பரிசோதனைமுறையின் வாயிலாக, சந்தேகத்திற்கு இடமானநோயாளிகளில் உண்மையாகவே பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்களை விரைவாகக் கண்டறிவதுடன் உரியநேரத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளித்து நோயைக்கட்டுப்படுத்த முடியும். இப்பிரச்சனைக்குத் தீர்வு காண; ஜிஐசி ரி; நிறுவனத்தின் நிதியுதவியுடன்செயல்படுத்தப்படும்
இத்திட்டத்தில், ஐஐடி மெட்ராஸ் அப்ளைடுமெக்கானிக்ஸ் துறையின்
பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர்வி.வி.ராகவேந்திர சாய் தலைமையிலான ஆராய்ச்சிக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஒத்துழைப்பு குறித்து ஜெனரல் இன்சூரன்ஸ்கார்ப்பரேஷன் ஆஃப்இந்தியா (ஜிஐசி ரி) இயக்குநர்மற்றும் பொது மேலாளர் திருமதி மதுலிகா பாஸ்கர்கூறுகையில், தொழில்நுட்பத்தில் புதுமை, வளர்ச்சியைஊக்குவிக்க தொழில் மற்றும் கல்வித் துறைகளுக்குஇடையிலான ஒத்துழைப்பு அவசியமாகும். கார்ப்பரேட்டுகள், வணிக நிறுவனங்களுடன் கல்வி நிறுவனங்கள் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதால்நிதியுதவி கிடைப்பதுடன், தங்கள் ஆராய்ச்சிப்பணிகளையும் விரிவுபடுத்த முடியும்.
ஜிஐசி-யைப் பொருத்தவரை, கல்வி மற்றும் சுகாதாரத்தில்கவனம் செலுத்தி வருகிறோம். இந்த இரு முக்கியகருப்பொருள்களை உள்ளடக்கிய அர்த்தமுள்ளமுன்முயற்சியில் ஐஐடி மெட்ராஸ்-உடன் கூட்டுச்சேர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் எனக் குறிப்பிட்டார்.
புதுமையான பிளாஸ்மோனிக் ஃபைபர் ஆப்டிக்பயோசென்சார் (P-FA8) தொழில்நுட்பத்தை ஐஐடிமெட்ராஸ்-ல் உள்ள பயோசென்சார்ஸ் ஆய்வகத்தில்உருவாக்கி வருகின்றனர். சிறுநீரில் உள்ள காசநோய் உயிரியலைக் கண்டறிவதற்கான ஆய்வக அளவிலானகருத்து ஆதாரத்தை அவர்கள் நிறுவியுள்ளனர். lipoarabinomannan (LAM) என்றழைக்கப்படும் இந்த ஆய்வின் முடிவுகள் புகழ்பெற்ற பயோசென்சார்ஸ் அண்ட் பயோஎலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி இதழில் கட்டுரையாகவெளிவந்துள்ளது.
அதனை பின்வரும் இணைப்பில் காணலாம்: Biosensors and Bioelectronics (https://doi.org/10.1016/j.bios.2020.112488).
இவற்றுடன், ஃபைபர் ஆப்டிக் சென்சார் ஆய்வுகள்உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் வடிவமைக்கப்பட்டுஉருவாக்கப்பட்டு உள்ளன. இந்த தொழில்நுட்பம்இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள இரு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. சிறுநீர்அடிப்படையில் காசநோயைக் கண்டறிய அடுத்தகட்டநடவடிக்கையாக, காசநோய் பாதித்த நோயாளியின் மாதிரிகள் மூலம் P-FAB-ஐக் கண்டறியும்தொழில்நுட்பத்தின் முறையான மருத்துவ சரிபார்ப்புஆய்வி மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் (PHCs) இத்தொழில்நுட்பத்தைபயன்படுத்தும் வகையில் எளிதாக்குவதுதான் ஆராய்ச்சித்திட்டத்தின் தற்போதைய முக்கியமான பணியாகும்.
சிறுநீர் அடிப்படையில் காசநோய் பரிசோதனை/நோய்கண்டறிதல் என்ற கருத்து ஆதாரத்தை ஐஐடி மெட்ராஸ்உருவாக்கும். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், நோய்கண்டறியும் கருவி உற்பத்தியாளர்களுக்கும் உரிய தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
பைபர் ஆப்டிக் சென்சார் ப்ரோப் ஃபேப்ரிகேஷன், ஆப்டோ எலக்ட்ரானிக் ரீட்அவுட் சாதனங்களுக்கானதொழில்நுட்பங்களுக்கு ஐஐடி மெட்ராஸ் ஏற்கனவேகாப்புரிமை பெற்றுள்ளது. விருப்பமுள்ளநிறுவனங்களுக்கு விண்ணப்பங்களின் அடிப்படையில்தனித்தனியாக அறிவுசார் சொத்துரிமைக்கானஉரிமங்கள் வழங்கப்படும்.
மருத்துவ பரிசோதனைக்கான கருத்து ஆதாரத்தை நிறுவஇந்த ஆராய்ச்சித் திட்டம் உதவிகரமாக இருக்கும். உரியதொழில்துறையினரின் கூட்டாண்மை உதவியுடன், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்ததயாரிப்பு பரந்த அளவில் பயன்படுத்தும் வகையில்தயாராகிவிடும்.