ராஜகோபால் இளன்கோவன் தயாரிப்பில் ஓம் விஜய் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “வெள்ளிமலை“. வெள்ளி மலையில் இயற்கையாக வளர்ந்து கிடக்கும் மூலிகைகள் எந்தெந்த வியாதிகளுக்கு எந்த மூலிகைஎன்பதை கண்டு ஆராய்ந்து பாடல் வரிகளாக நமக்கு தந்தவர்கள் சித்தர்கள். சித்தர்களின் முதன்மையானவர் நவபாஷானத்தால் பழநி முருகன் சிலையை செய்தவர் போகர். போகர் சொன்ன மூலிகையை கொண்டு மலைவாழ் மக்களின் வியாதிகளை குணமாக்கி வருகிறார் மலைவாழ் வைத்தியர் ஒருவர். அவர் ஊரில் இல்லாத நேரத்தில் பாம்பு கடித்த ஒருவரை தூக்கிக் கொண்டு வருகிறார்கள். வைத்தியர் இல்லாததால் அவரது மகன் சிறுவன் தவறான மூலிகையை கொடுத்ததால் பாம்பு கடித்தவர் இறந்து விடுகிறார். அதனால் இனி யாரும்வைத்தியரிடம் மருந்து வாங்கக் கூடாதென்று முடிவெடுக்கிறார்கள். பிறகு அந்த மலைக்கிராமத்தில் அரிப்புஎடுக்கும் ஒருவகையான தொற்று நோய் பரவுகிறது. இந்த அரிப்பு தொற்று நோயை அந்த வைத்தியர்குணமாக்கினாரா இல்லையா என்பதுதான் கதை. பச்சைப்பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக மலைப்பகுதியை விருந்தாகியுள்ள ஒளிப்பதிவாளர் பாராட்டுக்குரியவர். ஒரு நல்ல கருத்தை படமாக்கமுயற்சித்திருக்கிறார் இயக்குநர். ரகுநாதனின் இசை படத்துக்கு பக்கபலமாக உள்ளது. பாடலாசிரியர்கள் கரு.கார்த்திக், கருமாத்தூர் மணிமாறன் ஆகியோரின் பாடல் வரிகள் ரசிக்கும்படியுள்ளன.