தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இராயபுரம் சட்டமன்றதொகுதி மூலக்கொத்தளம் திட்டப்பகுதியில் ரூ.122.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1044 அடுக்குமாடி குடியிருப்பினை மாண்புமிகு குறு, சிறுமற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் இன்று(2.3.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் அவர்கள் பின்னர்தெரிவிக்கையில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விடமேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இராயபுரம்சட்டமன்ற தொகுதி மூலக்கொத்தளம்திட்டப்பகுதியில் பகுதி – 1 ரூ.77.01 கோடிமதிப்பீட்டில் தூண் தளத்துடன் 9 மாடிகளுடன் 648 குடியிருப்புகளும் , பகுதி – 2 ரூ.45.19 கோடிமதிப்பீட்டில் தூண் தளத்துடன் 11 மாடிகளுடன்396 குடியிருப்புகளும் மொத்தம் ரூ.122.20 கோடிமதிப்பீட்டில் 1044 அடுக்குமாடி குடியிருப்புகள் 5.29 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குகட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 409 ச.அடி பரப்பளவு கொண்டதாகும். இத்திட்டப்பகுதியில் குடிநீர், மற்றும் கழிவு நீர்இணைப்புகள் மின்தூக்கி வசதி, மின்னாக்கி, தீஅணைக்கும் கருவி ஆகிய வசதிகளுடன்கட்டப்பட்டுள்ளது .
இவ்வடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப்பணி 9.7.2018 அன்று தொடங்கப்பட்டு டிசம்பர்2020 பெரும்பாலான கட்டுமான பணிகள் நிறைவடைந்தது. சுற்றுச்சூழல் , CMDA, சென்னை மாநகராட்சி, RERA, ஆகிய அனுமதிகள் பெறாததால் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்புகள் 2 ஆண்டுகளாக வழங்கப்பபடவில்லை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின் அரசின்தொடர் நடவடிக்கையின் காரணமாகஇத்திட்டப்பகுதிக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், CMDA திட்ட அனுமதியும், சென்னை மாநகராட்சிகட்டட அனுமதியும், RERA அனுமதியும்பெறப்பட்டது. இன்னும் 2 மாதத்திற்குள் மின்இணைப்பு , குடிநீர் வசதி மற்றும் கழிவு நீர்கால்வாய் வசதி உள்ளிட்ட வசதிகள் முடிக்கப்பட்டு, விரைவில் அடுக்குமாடி குடியிருப்பு திறந்துவைக்கப்பட்டு பயனாளிகளுக்கு குடியிருப்புகள்ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்விஅபூர்வா இ.ஆ.ப, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விடமேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர்திரு.ம.கோவிந்த ராவ் இ.ஆ.ப, இராயபுரம்சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். மூர்த்தி, வாரியதலைமை பொறியாளர் திரு.ச.சுந்தரமூர்த்தி, நிர்வாகப் பொறியாளர் திரு. எஸ். சுடலைமுத்துக்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்கலந்துக் கொண்டனர்.