ரொறன்ரோ பல்கலைக் கழக பட்டதாரி மாணவி ஒருவரை கனடா உதயன் பத்திரிகையில் பயில்நிலை பத்திரிகையாளராக இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ள கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம்

கனடாவில் இயங்கிவரும் பல்லினப் பத்திரிகையாளர்கள் அமைப்புக்களில் அதிக அங்கத்தவர்களைக்  கொண்ட அமைப்பு கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் ஆகும்.
இந்த கழகத்தின் மூலம் கனடாவில் உள்ள பல்லினப் பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்கள் பல்கலைக் கழகங்களில் பத்திரிகைத்துறையில் பட்டப் பயிற்சி நெறிகளில் கற்றுவரும் பட்டதாரி மாணவர்களை  குறிப்பிட்ட சில மாதங்களுக்கு பயில்நிலை பத்திரிகையாளர்களாக பணிக்கு  அமர்த்திக்  கொள்ள கனடிய அரசாங்கத்தின்  மரபுரிமை அமைச்சு நிதி வழங்கி வருகின்றது.
இந்த திட்டத்தின் கீழ், ரொறன்ரோ பல்கலைக் கழக பத்திரிகைத்துறை பட்டதாரி மாணவி ஒருவரை கனடா உதயன் பத்திரிகையில் பயில்நிலை பத்திரிகையாளராக இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ள கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகம் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இங்கே காணப்படும் படத்தில் நேற்று மாலை ரொறன்ரோ மாநகரசபை வளாகத்தில் அமைந்துள்ள கனடிய பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மற்றும் கழகத்தின் தலைவர் தோமஸ் சாரஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் கைலாகு கொடுப்பதை  காணலாம்