சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய தர அமைவனம் சார்பில் “இரத்த தான முகாம்”

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி . .எஸ் ) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவுமற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும்ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கானதர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள்/கலைப்பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் ஆய்வகச்சேவைகளின் நலன் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது

ஒவ்வொரு ஆண்டும், சமூகத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் பெண்களின்சாதனைகள் மற்றும் அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரங்களைஅங்கீகரிக்க மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச மகளிர் தினம் என்பதுபெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும்அரசியல் சாதனைகளைக் கொண்டாடும் உலகளாவியதினமாகும். பாலின சமத்துவத்தை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைக்கான அழைப்பையும் இந்த நாள் குறிக்கிறது. பெண்களின் சாதனைகளைக் கொண்டாட அல்லதுபெண்களின் சமத்துவத்திற்காக அணிதிரள்வதற்காக இந்ததினம் கொண்டாடப்படுகின்றதுமேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய தர நிர்ணயஅமைவனம் , தென் மண்டல அலுவலகம், சென்னை இன்றுமற்றும் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்துள்ளது.

BIS, இன்று, 07 மார்ச் 2023, VHS (Voluntary Health Services ), பல்நோக்கு ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சென்னைஉடன் இணைந்து இரத்த தான முகாமை ஏற்பாடு செய்தது. இந்த இரத்த தான முகாமை ஸ்ரீ யுஎஸ்பி யாதவ், விஞ்ஞானி-F  மற்றும் துணை இயக்குநர் ஜெனரல் (தெற்கு மண்டலம்) தொடங்கி வைத்தார். Smt.G.பவானி, விஞ்ஞானி-E  மற்றும்தலைவர் (சென்னை கிளை அலுவலகம்) அனைத்து ஊழியர்களையும் இரத்த தானம் செய்ய ஊக்குவித்தார். இந்தநிகழ்வில் BIS இன் சுமார் 30 ஊழியர்கள் தங்கள் இரத்தத்தை தானம் செய்தனர்.

நாளையும் , சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு BIS 08 மார்ச் 2023 அன்று ஊழியர்களுக்காக பல்வேறு உள்நிகழ்ச்சிகள்/கலாச்சார நிகழ்ச்சிகள்/விளையாட்டுநிகழ்ச்சிகளை நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது .