விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிக்கும் “குஷி” செப்டம்பரில் வெளியீடு

சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம்குஷி‘. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜெயராம், சச்சின்கடேகர், முரளி சர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த்ஐயங்கார், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தைமைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இப்படம் செப்டம்பர் 1ல் வெளிவருகிறது**********

இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்தேவரகொண்டாசமந்தா ஜோடியின் நட்சத்திர மதிப்பிற்கு ரசிகர்களிடையே வரவேற்பும், எதிர்பார்ப்பும்உள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிஉள்ளது. இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று பல மொழிகளில் வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள பிரத்யேக பதாகையில் விஜய் தேவரகொண்டாவும் நடிகை சமந்தாவும் காதலுடன் கைகோர்த்துக்கொண்டு தோன்றுவது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது.