தேசிய கம்பெனி சட்ட நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் நியமனங்கள் முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் புதுப்பிக்கப்பட்ட வளாகத்தை மத்திய நிதியமைச்சர் திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘’சென்னையில் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு நீதி மன்றத்தின் கிளை மிகச்சரியான நேரத்தில் அமைக்கப்பட்டது, மேலும் இரண்டு கிளைகளில் ஒன்று விரைவில் செயல்படும். வழக்குகளைக் கையாளுவதில் 50 சதவீத வெற்றி பெறப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 578 வழக்குகளில், 200க்கும் மேற்பட்டவை முடித்து வைக்கப்பட்டுள்ளன. தேசிய கம்பெனி சட்ட நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகிய இரண்டிலும் முன்னேற்றம் பெறுவது ஊக்கமளிக்கிறது’’ என்று கூறினார்.
நீதித்துறை மற்றும் தொழில்நுட்ப பிரிவு விரைவில் நிரப்பப்படாதது குறித்து வெளியில் எப்போதுமே சிறிது அதிருப்தி உள்ளதாக கூறிய அவர், இந்த விஷயத்தை அரசு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டதுடன், பல நியமனங்கள் முழு வேகத்துடன் செய்யப்பட்டுள்ளன என்றார்.
முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இந்த மசோதாவை முன்னோடியாகக் கொண்டு, 2019க்குப் பிறகும் விரைவான திருத்தங்களை வலியுறுத்தினார். அரசு தரப்பில் அடிக்கடி எந்த தயக்கமும் இன்றி சட்டத்தை செம்மைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.
‘’சட்டத்தை வலுவானதாகவும், நிகழ்நேரத்திலும் தொழில்துறையின் சவால்களை எதிர்கொள்ளவும், தொழில்துறையின் தேவையை நிவர்த்தி செய்யவும் சட்டத் திருத்தம் தேவை என்று கூறுவதற்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் திருத்தங்களைச் செய்துள்ளேன்.திருத்தங்களை மேற்கொள்ள எப்போதும் நல்ல மனப்பான்மையும் ஒத்துழைப்பும் இருந்து வருகிறது, அந்தத் திருத்தங்கள் வருவதில் எந்தக் கேள்வியும் தயக்கமும் தடையும் இருந்ததில்லை’’ என்று அவர் கூறினார்.
‘’சில சந்தர்ப்பங்களில், முடிவெடுக்கும் வல்லுநர்களின் மட்டத்தில் முடிவெடுப்பதில் சில ‘ஆர்வம்‘ இயங்குகிறது. இது எங்கள் கவனத்திற்கு வந்ததும், நீதித்துறையின் ஆலோசனையுடன், ‘அது‘ அதிகம் பரவாமல் இருக்க, வெளிப்படையான செயல்முறை இருக்க வேண்டும் என்பதால், சரியான நடவடிக்கை எடுத்துள்ளோம். இத்தகைய நடவடிக்கைகளால், முதலீட்டாளர்களின் தயக்கம் நீக்கப்பட்டுள்ளன’’ என்று அவர் கூறினார்.
பேச்சுவார்த்தைகள் மூலம், குறைபாடுகளைக் களைந்து நடைமுறைகளை எளிதாக்கினால், முதலீட்டாளர்களின் மனதில் அதிக நம்பிக்கை வரும். இந்தியா ஒரு சிறந்த வலுவான அமைப்பைக் கொண்டுள்ளதுடன், நாட்டிற்கு வரும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.