மரணமடைந்த அரசு அலுவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராமநிர்வாக அலுவலர் திரு. லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினரை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம்மீனவர் நலத்துறை மற்றும்கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு.அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் நேரில்சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராமநிர்வாக அலுவலர் திரு. லூர்து பிரான்சிஸ் அவர்களின் குடும்பத்தினரை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம்மீனவர் நலத்துறை மற்றும்கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு.அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர்   பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப்பணிபுரியும் திரு. லூர்து பிரான்சிஸ் (வயது 53) தஃபெ. திரு.யேசுவடியான், என்பவரை இன்று மதியம் அவர்அலுவலகத்தில் பணியில் இருந்தபோது இரண்டு நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.  தலை மற்றும்கைகளில் பலத்த காயமுற்ற திரு. லூர்து பிரான்சிஸ் அவர்கள் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இச்செய்தியை அறிந்த  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு..ஸ்டாலின் அவர்கள்உடனடியாக உயிரிழந்த திரு.லூர்து பிரான்சிஸ் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த  இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டு  அன்னாரது  குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு சார்பாக உடனடியாகமுதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும், அவரது குடும்பத்தில்ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு..ஸ்டாலின் அவர்கள் உத்தரவிற்கிணங்க, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு வருவாய் மற்றும்பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகுமீன்வளம்மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்திரு.அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் உயிரிழந்த திரு.லூர்து பிரான்சிஸ் அவர்கள்குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

தொடர்ந்து மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள், தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 இலட்சம் உயிரிழந்ததிரு.லூர்து பிரான்சிஸ் அவர்கள் குடும்பத்தினாரிடம் வழங்கி  ஆறுதல் கூறினார்கள்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.. கார்த்திகேயன், .,., அவர்கள், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.அப்துல் வகாப் அவர்கள், திருநெல்வேலி மாநகராட்சிமேயர் திரு.பி.எம்.சரவணன் அவர்கள், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் திரு.இரா.ஆவுடையப்பன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மரு..மு.செந்தில்குமார் அவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைமுதல்வர் மரு.ரவிச்சந்திரன் அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.