இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது;
தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழி செய்யும் சட்டத் திருத்தம், முத்திரைத்தாள்கட்டண உயா்வு சட்டத்திருத்தம், 100 ஏக்கருக்கும் அதிகமான தனியார் – அரசு திட்டங்களுக்கு நீர்நிலைகள், நீரோடைகள் ஆகியவற்றை தாரை வார்க்கும் சட்டத்திருத்தம் உள்ளிட்ட 17 சட்ட மசோதாக்களை தமிழ்நாடுசட்டமன்றத்தில் ஏப்ரல் 21 அன்று, தனது பெரும்பான்மை பலத்தால் கில்லட்டின்கள் முறையில் திமுக அரசுநிறைவேற்றியுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்ற நடைமுறைகளின்படி, விவாதமின்றி நிறைவேற்றப்படும் மசோதாக்களை‘கில்லட்டின்’ மூலம் விவாதங்கள் கொல்லப்பட்டதாக கூறுவார்கள். அந்த வகையில் தமிழ்நாடுசட்டப்பேரவையில் ஒரே நாளில் 17 சட்ட மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டிருப்பது என்பதுஜனநாயக அடிப்படைக்கு முற்றிலும் முரணானது.
கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகளையும், எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், விவாதமின்றிசட்ட மசோதாக்களை நிறைவேற்றுவது என்பது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறையாக இருக்கமுடியாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக மசோதாக்கள் மீதான தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்வதற்கு அனுமதி வழங்காமல் பெரும்பான்மை பலம் மூலம்குரல் வாக்கெடுப்பு என்கிற முறையில் 17 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பெரும்பான்மை மமதையில் விவாதமின்றி மக்கள் விரோத மசோதாக்களை நிறைவேற்றி பாராளுமன்ற ஜ னநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் பாஜகவைப் போன்று, சமூக நீதி பேசும் திமுக அரசும் ஜனநாயக முறையைகேலிக்கூத்தாக்குவது போன்று நடந்துகொள்வது வருத்தமளிக்கின்றது.
சட்டமன்றத்தில் ஒரேநாளில் நிறைவேற்றப்பட்ட 17 மசோதாக்களில் தொழிலாளர்களை, மக்களை, சுற்றுச்சூழலை நேரடியாக பாதிக்கும் மசோதாக்களும் உள்ளன. இந்த மசோதாக்களை விவாதத்திற்கு கூடஉட்படுத்தாமல் அவசர கதியில் நிறைவேற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.
எந்த ஒரு மசோதாவாக இருந்தாலும் அது குறித்து விரிவான ஆழமான விவாதங்கள் நடைபெற வேண்டும். அதன்மீதான கலந்துரையாடல் மற்றும் ஒருமித்த கருத்து ஆகியவற்றை உருவாக்குதல் வேண்டும். அத்தகையதொருஜனநாயக நடைமுறைக்கு ஆளும் அரசு அனுமதிக்க வேண்டும். ஆனால், அந்த நடைமுறை தமிழ்நாடுசட்டமன்றத்தில் மீறப்பட்டுள்ளது.
சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அது குறித்து மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டு, அதன் பின்னர் துறைசார்ந்த அமைச்சர், உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்து, உறுப்பினர்கள்விரும்பினால் திருத்தங்கள் முன்மொழிந்து, அதன் பின்னர் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுபெற்றுசட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும். அல்லது அதனை திரும்பப் பெற வேண்டும். இத்தகைய ஜனநாயகமுறையே ஆரோக்கியமானது.
ஆகவே, ஆளும் திமுக அரசு சட்டமன்ற ஜனநாயக முறையை பின்பற்றி செயல்பட வேண்டும் எனவும், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் ஒன்றிய பாஜக அரசைப் போன்று செயல்படாமல் மக்களின் நம்பிக்கையைகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதோடு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாகஉயர்த்த வழி செய்யும் சட்டத் திருத்தம், முத்திரைத்தாள் கட்டண உயா்வு சட்டத்திருத்தம், 100 ஏக்கருக்கும்அதிகமான தனியார் – அரசு திட்டங்களுக்கு நீர்நிலைகள், நீரோடைகள் ஆகியவற்றை தாரை வார்க்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டம் ஆகிய சட்ட மசோதாக்களை திரும்பப்பெற வேண்டும் எனகேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.