குட்டிபுலி ஷரவண ஷக்தி இயக்கியிருக்கும் படம் ‘குலசாமி’. தமிழ்நாட்டில் நடந்த சில பாலியல் உண்மை சம்பவங்களை தொகுத்து ஒரு திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். பாலியல் குற்றம் புரிந்த உண்மையான குற்றவாளிகள் அரசியல் செல்வாக்கிலும் பணபலத்தாலும் இன்றும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாகத்தான் இருக்கிறார்கள். அந்த உண்மை குற்றவாளிகளை எப்படி கொல்ல வேண்டும் என்ற தனது ஆதங்கத்தை திரைப்படமாக தயாரித்து சொல்லியிருக்கும் இயக்குநர் குட்டி புலி ஷரவண ஷக்தி பாராட்டுதலுக்குறியவர். ஆனந்தத்திலும் சரி அழுகையிலும் சரி ஒரே விதமாகவே தனது முகத்தை வைத்திருக்கும் விமல், இப்படத்தில் கதாபாத்திரத்திற்கு ஏற்ப உணர்வுகளை முகத்தில் காட்டியுள்ளார். நடிகர் சேதுபதியின் வசனம் படத்திற்கு வலு சேர்க்கிறது. மதன் கார்க்கி, சிநேகன், வா.கருப்பன் பாடல் வரிகள் மகாலிங்கத்தின் இசையில் ரசிக்கும்படி உள்ளது. ஓய்வு பெற்ற காவல்துறை ஆணையர் ஜாங்கிட் ஐ.பி.எஸ். உச்சக்கட்ட காட்சியில் தோன்றி இயக்குநரின் கருத்துக்கு ஆதரவளிக்கிறார். ************
ராமநாதபரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திலிருக்கும் விமல் தனது தங்கை மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார் விமல். தங்கையை டாக்டராக்க வேண்டும் என்ற ஆசையால் மதுரையில் குடியேறி ஆட்டோ ஓட்டி தனது தங்கையை டாக்டருக்கு படிக்க வைக்கிறார். சில பணக்கார அரசியல் பின்பலமுள்ள சில வாலிபர்கள் விமலின் தங்கையை கற்பழித்து கொலை செய்து விடுகிறார்கள். அதே போல் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிகளையும் தங்களது வலையில் விழவைத்து கற்பழித்து கொலை செய்து விடுகிறார்கள். இவர்களை எப்படி தகுந்த ஆதாரத்துடன் பழி தீர்க்கிறார் என்பதை சஸ்பென்ஷாக படம் முழுவதும் உள்ள்து.