செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதியதாக கட்டப்படும் பேரூந்து நிலையம் குறித்து ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை கூட்டரங்கில் மாண்புமிகு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தில் அரசு பேருந்துகளை இயக்குவது தொடர்பாகவும் மற்றும் போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும் போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.கே.கோபால், இ.ஆ.ப., அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா இ.ஆ.ப., அவர்கள், சென்னைப் பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு.அன்சூல் மிஸ்ரா இ.ஆ.ப., அவர்கள், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணைய (CUMTA) சிறப்பு அலுவலர் திரு.ஐ.ஜெயக்குமார், ஐ.ஆர்.டி.எஸ்., அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள், போக்குவரத்து ஆணையர் திரு.இல.நிர்மல்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள், தாம்பரம் காவல் கூடுதல் துணை ஆணையர் (போக்குவரத்துப் பிரிவு) திரு.அன்வர் பாஷா அவர்கள், போக்குவரத்துத் துறை மேலாண்மை இயக்குநர்கள், சி.எம்.டி.ஏ. அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.