சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா 21.5.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப., தகவல்.

சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில்சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா அரங்கங்களை28.04.2023 அன்று மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

        மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கைத்தறி நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்கள், நடனக்கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்துள்ள   சென்னை விழாவில்  பூம்புகார், கோஆப்டெக்ஸ், கைத்தறித்துறை ஆகியவற்றைச் சேர்ந்த 70 அரங்கங்களும், தமிழ்நாட்டின் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் 75 அரங்கங்களும், 10 வெளிநாடுகளைச் சேர்ந்த 30 அரங்கங்களும், 20 வெளிமாநிலங்களைச் சேர்ந்த 83 அரங்கங்களும், உணவு அரங்கங்கள் 40 ம், சுற்றுலாத்துறை மற்றும்கைவினை தயாரிப்பாளர்  அரங்கங்கள்  13 ம் என மொத்தம் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  இந்த கண்காட்சியால் சென்னை பொதுமக்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் கைவினைகலைஞர்களின் படைப்புகள், முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளதுசென்னை விழாவில் காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், தூய ஜரிகை சேலைகள், கோரா காட்டன் சேலைகள், மென்பட்டு சேலைகள், கோடம்பாக்கம்சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், ராசிபுரம் தாழம்பூ கோர்வை பட்டு புடவைகள், ஆர்கானிக்கைத்தறி சேலைகள், நெகமம் கைத்தறி சேலைகள், பாவானி ஜமக்காளம், படுக்கை விரிப்புகள், அலங்கார கைத்தறி துணிகள், மேஜை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், செட்டிநாடுசுங்கடி புடவைகள், ஓவியங்கள், மரவேலைப்பாடுகள், மகளிர் அணிகலன்கள், இயற்கை மூலிகைபொருட்கள், சிப்பிகளால் தயாரிக்கப்பட்ட கலை பொருட்கள், துணிப்பைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பத்தமடை பாய் உள்பட ஏராளமான தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களின் கண்களுக்கும், மனதுக்கும் விருந்து படைக்கும் வகையில் தினந்தோறும் 5 க்கும்மேற்பட்ட கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

          தினந்தோறும் காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெற்று வரும் சென்னைவிழா சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா அரங்கங்களை ஏராளமானபொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் பார்வையிட்டு வருகின்றனர். 28.04.2023 அன்று தொடங்கப்பட்டு 14.5.2023 வரை நடைபெற இருந்த சென்னை விழா21.05.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வருகை தந்து கண்டுகளித்து பயன்பெற வேண்டும்.