*‘ஹிட்லிஸ்ட்’டில் இணைந்த கவுதம் வாசுதேவ் மேனன்

ஆர்கே செல்லுலாய்ட்ஸ், தற்போதுஹிட்லிஸ்ட்என்கிற படத்தை தயாரித்து வருகிறது. பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் அவரது முதல் படமாக இது உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் சித்தாரா, முனீஸ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், பாலசரவணன், ரெடின்கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎஃப் புகழ் கருடா ராமச்சந்திரா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்ட பலர் முக்கியகதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பயங்கரமான வில்லனாக நடிப்பதன்மூலம் இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலில் தற்போது இணைந்துள்ளார். அவர் நடித்த சில முக்கியமான காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. ********

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய சூரியகதிர் மற்றும் கார்த்திகேயன்இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கி வருகின்றனர். நடிகர் சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கியமானகதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவை ராம்சரண் கையாள, படத்தொகுப்பை ஜானும் கலை இயக்கத்தை அருணும்  கவனிக்கின்றனர்.

ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படத்திற்கு தேவையான கமர்சியல் அம்சங்கள் நிறைந்த ஆக்சன்திரில்லராக இந்த படம் இருக்கும். கிட்டத்தட்ட முடிவுறும் தருவாயில் இருக்கும் இந்த படத்தின் பணிகள்தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.