துபாய் தொழிலதிபர் கண்ணன் ரவி தயாரிப்பில் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்கியராஜ், பிரபு சிவாஜிகணேசன், இளவரசு, ஆனந்தி, அருள்தாஸ், தேனப்பன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘இராவணக் கோட்டம்’. ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் மேலத் தெருவில் ஒரு சாதி கீழத்தெருவில் ஒரு சாதி. இரு சாதிப்பிரிவின் முக்கியஸ்தர்களான பிரபு சிவாஜிகணேசனும் இளவரசும் இணைபிரியாத நண்பர்கள். அதைப்போலவே பிரபுவின் உறவுக்காரர் சாந்தனு பாக்கியராஜும் இளவரசுவின் மகனும் இணைபிரியாத நண்பர்கள். அமைச்சர் தேனப்பனும் எம்.எல்.ஏ. அருள்தாசும் இருபிரிவனரின் ஒற்றுமையை பிரித்து இருவர்களையும் பகைவர்களாக்க சாந்தனு பாக்கியராஜின் அத்தை மகளான ஆனந்தியை பகடைக்காயாக்கி சூழ்ச்சி செய்கிறார்கள். இந்த சூழ்ச்சியின் பின்னணியில் கார்பரேட் நிறுவனங்களின் சூட்சமம் இருப்பதை முடுச்சிகள் போடாமல்இயக்குநர் வெளிப்படுத்துகிறார். இதுதான் கதை. சாந்தனு பாக்கியராஜின் அற்புத நடிப்பு பாராட்டுதலுக்குரியது. கதையின் சாராம்சத்தை உள்வாக்கி நடித்திருக்கிறார். கதையின் திருப்புமுனைக்கு தனது காதல்தான் என்பதை ஆனந்தி அழகுபட செய்திருக்கிறார். பிரபு சிவாஜிகணேசனும் இளவரசும் ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்து நடித்துள்ளார்கள்.