அகதிகளின் மனவலியை பிரதிபலிக்கும் படம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”

எஸ்.இசக்கி துறை தயாரிப்பில் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில்வெளிவந்திருக்கும் பட்ம்யாதும் ஊரே யாவரும் கேளிர்‘. அகதிகளின் வாழ்க்கை எவ்வளவு வலியைதருகிறது என்பதை திரையில் சித்தரித்துள்ளார் இயக்குநர். இலங்கை இனப்படுகொலையால் நாட்டைவிட்டு வெளியேறிய மக்கள் அகதிகளாக தமிழ் நாட்டில் தஞ்சமடைகிறார்கள். அப்படிதஞ்சமடைந்த விஜய் சேதுபதியின் கனவு, லண்டனில் நடக்கவிருக்கும் இசைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அகதிகள் போட்டியில் கலந்து கொள்ள முடியாதுஎன்பதால், போட்டியில் கலந்து கொள்ளும் விண்ணப்ப படிவத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வேறு ஒருவரின்முகவரியை பதிவு செய்ய முயற்சிக்கிறார் விஜய் சேதுபதி. (இதற்கு அவர் படுகின்ற கஷ்டங்களும்அவமானங்களும் நம் விரோதிகளுக்குகூட வரக்கூடாது). போலியான பெயரில் இசைப்போட்டியில் எப்படிகலந்து கொள்கிறார் என்பதுதான் கதை. அவமானங்களை தாங்கும் போது விஜய் சேதுபதியின்அமைதியும், மனவேதனையில் காட்டும் புன்சிரிப்பும்,  நம் இனத்தின் பிள்ளை என நினைக்கும்போதுகண்கலங்குகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு இணையான கதாநாயகன் வசனம்தான்.