தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் தான் மக்களுக்காகத்தான் திட்டங்கள் என்ற வகையிலே அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துகின்ற ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது – அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் மாண்புமிகுசென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் () தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (20.5.2023) வேளச்சேரி சட்டமன்றதொகுதிக்குட்பட்ட சென்னை வேளச்சேரி, 100 அடி புறவழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின்கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாகவும், சோழிங்கநல்லூர்சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன்சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாகவும் ஆகியஇடங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :  

 தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சென்னைபெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் விரைவுபடுத்த வேண்டுமென்ற உத்தரவின் அடிப்படையில்
50
இடங்களையும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து, சென்னைப் பெருநகரபகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் இன்றோடு(20.5.2023) 24 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கின்றோம் மீதமுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள10 திட்டங்களையும் இந்த மாத இறுதிக்குள் நேரடியாகச் சென்று களஆய்வில் ஈடுபடவிருக்கின்றோம். அந்த வகையில், அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக இன்று (20.5.2023) வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை வேளச்சேரி, 100 அடி புறவழிச்சாலையில்அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாககள ஆய்வு செய்திருக்கின்றோம். அதேபோல, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டசென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில்புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம். இப்பணிகள் துவங்குவதற்கு விரைவானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்படுகின்ற சிதிலமடைந்த பள்ளிக்கூடங்களை புதுப்பித்தல், பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல், சலவைக் கூடங்களை மறுவளர்ச்சிமேம்படுத்துதல், காசிமேடு கடற்கரையோரம் 5 கிலோ மீட்டர் அளவிற்கு அந்த இடத்தை அழகுபடுத்துதல்போன்ற பல்வேறு பணிகள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒட்டுமொத்தமான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் இந்த அறிவிப்புளை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்கள் சீரிய ஆலோசனையின் பேரில் வடிவமைத்த இந்தத் திட்டங்கள் அனைத்தும்சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கு ஏற்றாற்போல், திட்டங்களைத் திருத்திஅமைத்து, மக்களுக்காகத்தான் திட்டங்கள் என்ற வகையிலே இந்த திட்டங்களைச் செயல்படுத்துகின்றஒரு முன்மாதிரியான முன்னெடுப்பு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் இல்லாத ஒரு புதியநடைமுறையை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த களஆய்வுநிச்சயம் ஒரு பயனுள்ளதாக அமையும்.  இந்த பகுதிகளிலுள்ள சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள்அனைவருடைய உடல் நலத்தைப் பாதுகாக்கின்ற வகையிலும், அதே நேரத்தில் விளையாட்டைஊக்குவிக்கின்ற வகையிலும், பெரும்பாக்கத்தில் விரைவில் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல்ஏற்படுத்தித் தரப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.  

மேற்கண்ட அனைத்து பணிகளையும் விரைவுபடுத்துகின்ற நோக்கத்தோடு மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முழுவீச்சில்செயல்பட்டு வருகிறது. இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் செல்விஅபூர்வா ..., அவர்கள், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.அரவிந்த் ரமேஷ்அவர்கள், சென்னைப் பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் திரு.அன்சூல் மிஸ்ரா..., அவர்கள், அடையார் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் திரு.துரைராஜ் அவர்கள், சி.எம்.டி.. தலைமைத் திட்ட அமைப்பாளர் திரு.ருத்ரமூர்த்தி அவர்கள், முதன்மைத் திட்ட அமைப்பாளர்திருமதி.அனுசுயா அவர்கள், மாநகராட்சி மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.