ஆவின் நிர்வாகத்தில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் உறுதி

பால்வளத்துறை அமைச்சர் .மனோ தங்கராஜ் (22.05.2023) அன்று இரவு 9 மணி முதல்11 மணி வரை அம்பத்தூர் பால் பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  சென்னை அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணைகளில் கடந்த மூன்று நாட்களாகபால்  வினியோகம் தாமதமாக நடைபெறுவதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்த நிலையில் இரவு9 மணி முதல் 11 மணிவரை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில்  மாண்புமிகு பால்வளத்துறைஅமைச்சர் . மனோ தங்கராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தென் மாவட்டங்களிலிருந்து அம்பத்தூர் பால் பண்ணைக்கு கொண்டு வரப்படும் பால் டேங்கர் லாரியின்மேலே ஏறி மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார். டேங்கர் லாரிக்குபோடப்பட்ட சீல் முறையாக போடப்பட்டிருக்கிறதா எனவும் ஆய்வு செய்தார். பால் பதப்படுத்தப்படும்பிரிவு, தர கட்டுப்பாட்டு பிரிவு, பால் குளிரூட்டும் பிரிவு, பாலித்தீன் பைகளில் பேக்கிங் செய்யப்படும் பகுதி, பால் டப்களை சுத்திகரிக்கும் பகுதி, ஆவின் சந்தாதாரர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் பால் கொண்டு செல்லும் வாகனங்களையும், கணினி வாயிலாக போடப்பட்ட பில்களையும்ஆய்வு செய்தார். ஒப்பந்த ஊழியர்களின் வருகைப் பதிவேடு, பெயர் விவரம் ஆகியவற்றை கேட்டு அறிந்துஆய்வு செய்தார். குளிர் பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்யப்படும் இடத்தில் பாலித்தீன் பைகளின் தரம்மற்றும் பேக்கிங் செய்யப்படும் கருவிகள் முறையாக வேலை செய்கிறதா எனவும் ஆய்வு செய்தார்.