சிக்னல் நடைமுறை, கணக்கீடு, மின்னணுவியல், மின்சாரம், தொலைத்தகவல் குறித்த சர்வதேச கருத்தரங்கை காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம்-  என்ஐடி நடத்தியது

காரைக்காலில் அமைந்துள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம், மின்னணுவியல் மற்றும்தொடர்பு துறை, மின் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் கணினி அறிவியல் துறை ஆகிய மூன்றுதுறைகளின் சார்பாகசிக்னல் நடைமுறை, கணக்கீடு, மின்னணுவியல், மின்சாரம் மற்றும்தொலைத்தொடர்புகுறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் உள்ள கி. ராகலையரங்கில் இன்று (25.05.2023) தொடங்கியது. இக்கருத்தரங்கின் தலைமை விருந்தினராக சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின்எரிசக்தி ஆராய்ச்சி நிறுவன கிளஸ்டர் இயக்குநர் முனைவர். லீ யீ ஹுய், கலந்துகொண்டு செயற்கைநுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் மூலமான ஆராய்ச்சியின் முன்னேற்றம் குறித்து உரையாற்றினார்.  இக்கருத்தரங்கின் கெளரவ விருந்தினர்களாக திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்ப நிறுவனபேராசிரியர்

கி. சங்கரநாராயணசாமி, ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி முதல்வர் கே. பொற்குமரன் ஆகியோர்கலந்துகொண்டனர். நிறுவனத்தின் இயக்குனர் (பொறுப்பு) முனைவர் கணேசன் கண்ணபிரான் பேசுகையில், இளைஞர்கள்எண்ணிக்கையுடன், இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாகஉருவாகும் என்றார்.  இக்கருத்தரங்கின் தலைவரான முனைவர். ஜி. லட்சுமி சுதா பேசுகையில், அமெரிக்கா, தென் கொரியா, பிரேசில், ஸ்வீடன், ஓமன், வியட்நாம், இலங்கை, பங்களாதேஷ் போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், தனியார்பல்கலைக்கழகங்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்துறை நிபுணர்களிடமிருந்து 437 கட்டுரைகள்பெறப்பட்டன என்றார். இவற்றிலிருந்து சுமார் 200 கட்டுரைகள் தேரிவுசெய்யப்பட்டு 17 அமர்வுகளாகசமர்பிக்கப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும் இக்கருத்தரங்கில் பேராசிரியர் டாக்டர் துஷ் நளின் ஜெயக்கொடி, டாக்டர் யோங் லியாங் குவான், திரு. நித்தேஷ் அகர்வால் ஆகியோரின் முக்கிய உரை இடம்பெறுகிறது. முன்னதாக நிறுவனத்தின் பொறுப்பு  இயக்குநர் முனைவர் கணேசன் கண்ணபிரான் இக்கருத்தரங்கைகுத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தார்.