தொழுகை என்பது நம் இஷ்டப்படியும், நாம் நினைக்கிற மாதிரியான முறையில் செய்யப்படும் வணக்கமல்ல. இஸ்டப்பட்டால் தொழுவது அல்லது விட்டுவிடுதல். தான் விரும்பியவாறு முற்படுத்தி தொழுதல் அல்லதுபிற்படுத்தி தொழுதல். நீ பாங்கொலி சப்தத்தைக் கேட்டால் மன்னர்களுக்கெல்லாம் மிகப்பெரிய மன்னன் உன்னை இப்போது . . . இப்போதே உன்னை அழைக்கின்றான் என்பதை நீ முதலில் அறிந்து கொள்! எனவே, ரஹ்மானும் ரஹீமுமாகிய அல்லாஹ்வுடைய இல்லத்தில் ஆஜர் ஆகிவிடு! மிக அவசரமான மற்றும் கண்டிப்பான அழைப்பு அது. பாங்கொலியை கேட்டதும் அதை ஏற்று பதில்தருவது கடமையான ஒன்று.
உடனடியாக நீ செய்ய வேண்டியது உன் கரத்தில் உள்ள பேனாவை தூக்கிப்போடு! எவ்விதமான ஆலோசனை கலந்துரையாடல் அமர்வில் நீ இருந்தாலும் அதை உடனே முடித்துக் கொள்! ஏனெனில், இவைகள் எல்லாவற்றையும்விட அல்லாஹ்வே மிகப் பெரியவன். பணிவோடு உன் தொழுகையை நிறைவேற்று. உலக காரியங்களில் உன்னை எதிர்பார்க்கும் எல்லா காரியங்களை விடவும் தொழுகையேஉனக்கு முக்கியமான ஒன்று. இவ்வுலக வாழ்க்கையில் உனக்குரிய பங்கு உன்னிடம் கண்டிப்பாக வந்துசேர்ந்து விடும். அது உன்னை எதிர்ப்பார்த்து காத்து இருக்கும் என்பதை நம்பு! உலக விஷயங்களுக்காகபல மணி நேரங்களை கொடுக்கின்றாய். தொழுவதற்காக எத்தனை மணி நேரம். . . ?
சொற்பமான சில நிமிடங்கள்தான். அல்லாஹ்வுக்காக சில நிமிடங்களை ஒதுக்கு! யாருக்கு முன்பாக நீதொழும் போது நிற்க போகிறாய்? என்பதை ஒரு முறை யோசித்துப் பார்! யாருக்காக இந்த தொழுகை? என்பதையும் மனதில் கொண்டு வா! இறைவனுடைய மகத்துவம் உனக்கு புரியும்! எல்லாவற்றையும் அடக்கி ஆளும் வல்லமை பெற்றஇரட்சகன் அவன் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்! பாங்கில் “த ஆல் லிஸ்ஸலாத்” (تعال للصلاة) தொழுகைக்கு வா என பொருள் தரும் வார்த்தையைகூறுவதில்லை. மாறாக பாங்கில் “ஹய்ய அலஸ்ஸலாத்” என்றே ஒலிக்கப்படுகிறது . அதுஅவசரத்தையும், துரிதமாக செயலாற்றுவதையும் குறிக்கும்! சீக்கிரமாக கிளம்பு! எல்லாவற்றையும்விட்டுவிட்டு பள்ளிவாசலுக்கு கிளம்பு! இதுதான் அதன் அர்த்தம்!
தொகுத்தவர்: அபு தாஹிர்