”அடித்தட்டு மக்களின் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் ஒருபோதும் தோல்வியைத் தழுவுவதில்லை” – கவிஞர் வைரமுத்து

கனடா ஆரபி படைப்பகத்தின் தயாரிப்பாக வெளிவரவுள்ள ‘ FINDER ‘ திரைப்படத்தின் இயக்குனரிடம் பகிர்ந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்
(சென்னையிலிருந்து செய்தியாளர் சத்தியன்)
————————————————————
”அடித்தட்டு மக்களின் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் ஒருபோதும் தோல்வியைத் தழுவுவதில்லை .எனவே தங்கள் திரைப்படம் அவ்வாறான திரைக் கதையைக் கொண்டிருப்பதால் நீங்கள் நம்பிக்கையுடன் உங்கள் FINDER திரைப்படத் தயாரிப்பு வேலைகளைத் தொடருங்கள். அதற்கு எனது நண்பர்கள் சுவிற்சலாந்து வாழ் சதீஷ் மற்றும் கனடா வாழ் லோகேந்திரலிங்கம் ஆகியோரின் வேண்டுகோளின்பேரில் பாடல்களை எழுதுவதற்கு மனமுவற்து ஏற்றுக் கொண்டுள்ளேன்”
இவ்வாறு கனடா ஆரபி படைப்பகத்தின் நிறுவனர் ரஜீவ் சுப்பிரமணி;யம் அவர்களின் தயாரிப்பில் வெளிவரவுள்ள ‘ FINDER ‘ திரைப்படத்தின் இயக்குனரான வினோத் ராஜேந்திரன் அவர்களிடம் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது தெரிவித்தார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.
கனடா ஆரபி படைப்பகத்தின் நிறுவனர் ரஜீவ் சுப்பிரமணி;யம் அவர்களின் தயாரிப்பில் தற்பொழுது தமிழ்நாட்டின் பல பகுதிகளில்FINDER படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது, இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள இந்த தயாரிப்பில் படத்திற்கான மூன்று பாடல்களை எழுதுவதற்கு கவிப்பேரசு அவர்களையே தயாரிப்பாளர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களும் இயக்குனர் வினோத் ராஜேந்திரன் அவர்களும் விரும்பினார்கள்.
 
சில நாட்கள் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் பாடல்களை எழுதுவதற்கு சம்மதம் தெரிவித்த கவிப்பேரரசு அவர்கள் FINDER படக்குழுவினரை சென்னையில் தனது அலுவலகத்தில் சந்தித்தார். அந்த ச்நதிப்பில் FINDER இயக்குனர் வினோத் ராஜேந்திரன், இசையமைப்பாளர் சூரியபிரசாத் மற்றும் இணை இயக்குனர் சாம் சூருியா ஆகியோர் கவிப்பேரரசு அவர்களைச் சந்தித்தனர். சந்திப்பின் போது கவிப்பேரரசு FINDER படக் குழுவினரிடம் மிகவும் உற்சாகமாக உரையாடினார். அவர் தொடர்ந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டபோது ” புலம் பெயர் தமிழர்கள் தென்னிந்திய தமிழ்த் திரைப் படத்துறையில் முதலிடும்போது எமது ரசிகர்கள் அவர்கள் இலாபமடைய வேண்டும் என்று உற்சாகப்படுத்த வேண்டும். அதைப் போன்று புலம் பெயர் தமிழ் மக்களின் இந்த முயற்சிகளுக்கு என்றும் நான் துணையாக இருப்பேன். FINDER திரைப்படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார். இங்கே காணப்படும் படங்கள் சந்திப்பின்போது எடுக்கப்பெற்றவையாகும்.