ஆவின் நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள பால் பதன பிரிவு, பால் உப பொருட்கள் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு  பணிகளை மேம்படுத்துவது குறித்த கலந்தாய்வுக்கூட்டம்

பால்வளத்துறை அமைச்சர் .மனோ தங்கராஜ் தலைமையில் (30.05.2023) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களின் பால் பதம்மற்றும் தர உறுதி பிரிவுகளுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் .மனோ தங்கராஜ் அவர்கள் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தார்:

 1. பால் பொருட்கள் உற்பத்தியின் போது ஏற்படும் இழப்பீடுகளுக்கு அனுமதிக்கப்பட்ட இழப்பு நிர்ணயம்செய்தல் (Norms).

2. அனைத்து நிலைகளிலும் தர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்.

3. பால் மற்றும் பால் உப பொருட்களில் சுவை மற்றும் தரத்தை மதிப்பிடுவதற்கு ஆராய்ச்சி ஆய்வகம்அமைத்தல்.

4. பால் உற்பத்தி அதிகரிக்கும் போதும், குறையும் போதும் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளைசமாளிக்க திட்ட வரைவு தயாரித்தல்.

5. உற்பத்தி செய்யப்படும் பால் மற்றும் பால்  உப பொருட்கள் நுகர்வோருக்கு அனுப்பி வைக்கும் போதும், போக்குவரத்தின் போதும் தரம் குறையாமல் உரிய நேரத்தில்  தரமான பொருட்கள் நுகர்வோருக்குசென்று சேருவதை உறுதி செய்தல்.

6. ஆவின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அவர்கள் துறை சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிஉடனடியாக வழங்குதல்.

7. பேக்கிங் மூலப்பொருட்கள், ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் பால் உபபொருட்களுக்கு உண்டான தர நிர்ணய விவரங்களை  உறுதி செய்தல்.

 8. தொழிற்சாலைகளில் FSSAI அங்கீகரிக்கப்பட்ட தர நிர்ணயப்படி பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்தல்.

9. பால் மற்றும் பால் உப பொருட்களை கையாளுவதற்கு மாவட்ட ஒன்றிய மற்றும் இணைய அளவில்குளிர்விக்கப்பட்ட மற்றும் குளிர்விப்பு வசதி தேவைப்படாத சேமிப்பு கிடங்கு வசதியை மேம்படுத்தவேண்டும்  (Refrigerated and Non Refrigerated Storage Facilities).

10. நொதியூட்டப்பட்ட பால் உப பொருட்களான (தயிர், மோர், லஸ்ஸி), ஐஸ் கிரீம், மற்றும் இனிப்புவகைகள் ஆகியவற்றிற்கு  தனி வாகனங்கள் மூலம் விற்பனைக்கு விநியோகிக்கப்பட வேண்டும்.  

 இந்த ஆய்வு கூட்டத்தில், பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு. வினீத்..., அவர்கள்,  மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் பால் பதம் மற்றும் தர உறுதி பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.