பால்வளத்துறை அமைச்சர் திரு.த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் இன்று (02.06.2023) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களின் நிர்வாகம் (Administration), கணக்கு (Accounts) பிரிவுகளுக்கான ஆய்வுக்கூட்டம் சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்றது. இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர்டாக்டர் சு. வினீத் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஒன்றியங்களின் பொறியியல் மற்றும் கட்டுமானப் பிரிவுகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.