ஜீ ஸ்டுடியோ தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் ஆரியா, பிரபு நடித்திருக்கும் படம் “காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம். ராமநாதபுரத்திலுள்ள ஒரு கிராமத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் மாமான் மச்சான் என்ற உறவு முறையோடு வாழ்கிறார்கள். முஸ்லீமாக இருக்கும் பிரபுவுக்கு குழந்தை இல்லாததால் இந்து குழந்தையான ஆரியாவை தத்தெடுத்து வளர்க்கிறார். இயக்குநர் முத்தையா படமென்றால் குடும்பமும் அதில் நடக்கும் குழப்பமும்தான் கதையாக இருக்கும். உறவு முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படமெடுப்பார். முடிவில் அனைத்து உறவுமுறைகளும் சந்தோஷ்மாக ஒன்று கூடுவார்கள். ஆனால் இந்த படத்தில் உறவுமுறைகளின் முடிவு வேறுவிதமாக எடுத்திருக்கிறார். இந்துக்களும் முஸ்லீம்களு மாமா மச்சானோடு வாழ்கின்ற உறவுமுறைக்கு எந்த பங்கமும் வராமல் படமாக்கியிருக்கும் இயக்குநரின் மதநல்லிணக்கம் பாராட்டுதலுக்குறியது