மின் கட்டண உயர்வா? அரசு அனுமதிக்கக் கூடாது-ஆர் முத்தரசன்

தமிழ்நாடு மின்வாரியம் வரும் ஜூலை முதல் மின் கட்டணத்தை 4.70 சதவீதம் உயர்த்துவதாக செய்திகள்வெளியாகியுள்ளன. மின்வாரியத்தில் நிலவும் நிதி நெருக்கடியை காரணம் காட்டி தான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கடடணங்கள் உயர்த்தப்பட்டன. அப்போது ஆண்டுதோறும் மின்கட்டணம் உயர்த்தப்படும் என வெளியானசெய்தியை அரசு தரப்பில் மறுத்து வந்தனர். ஆனால், இன்று அது உண்மையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒராண்டுக்குள் இருமுறை கட்டண உயர்வு செய்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைகருத்தில் கொண்டு மின்வாரிய நிதி நெருக்கடியை எதிர் கொள்ள வேறு வழிகள் குறித்து ஆராயவேண்டும். குறிப்பாக தனியாரிடம் கொள்முதல் செய்யும் விலை குறைப்பு உள்ளிட்ட வழிகள் குறித்துபரிசீலிக்க வேண்டும். அதனை தவிர்த்து மின்வாரிய கட்டண உயர்வு முன்மொழிவை ஏற்கக் கூடாது, அனுமதிக்கக் கூடாது  என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடுஅரசைக் கேட்டுக் கொள்கிறது.