மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.6.2023) சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்நூற்றாண்டு விழாவையொட்டி, 5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை, மரக்கன்று நட்டு வைத்துதொடங்கி வைத்தார்.
“மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்” என்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்சொல்லிற்கிணங்க, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டுதமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளிலும் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படும்என்றும், இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் என்றஇலக்கு எட்டப்படும் என்றும் 2023-2024ஆம் ஆண்டு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பிற்கிணங்க, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா தொடக்க நாளானஇன்று (7.6.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை கிண்டியில் உள்ளநெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 5 இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை மரக்கன்றுநட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
இன்றையதினம் தமிழகமெங்கும் நெடுஞ்சாலை துறையின் 340 சாலைகளில் நடப்படவுள்ள மகிழம், வேம்பு, புளியன், புங்கன், நாவல், சரக்கொன்றை போன்ற வகையைச் சார்ந்த சுமார் 46,410 மரக்கன்றுகள், 24 மாத காலம் வளர்ச்சிக் கொண்டவையாகும். மேலும், பருவமழைக்கு முன்பாகவே 5 இலட்சம் மரக்கன்றுகளையும் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு நகராட்சிநிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர்க.பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மாண்புமிகு மருத்துவம்மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. டி.ஆர்.பாலு, திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர்திரு.மு.மகேஷ்குமார், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் திரு.பிரதீப் யாதவ், இ.ஆ.ப., தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர்திரு.அண்ணாதுரை, இ.ஆ.ப., நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகுதலைமைப்பொறியாளர் திரு.இரா. சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.