கடற்கரையை தூய்மைபடுத்த பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்: மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

கடற்கரைகளை தூய்மைப்படுத்த பொதுமக்கள் அதிக அளவில் பங்கு பெற வேண்டும் என மத்திய புவிஅறிவியல் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டார். உலக பெருங்கடல்கள் தினத்தைஒட்டி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மேலும் பேசிய அமைச்சர், இந்தியா 7,500 கி.மீ. க்கும் அதிகமான கடற்கரையைக் கொண்டுள்ளது எனவும்நாம் பெருங்கடல்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுடன் நேரடி மற்றும் தீவிரதொடர்பை கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார். மேலும்சென்னை அழகிய கடற்கரையைக் கொண்டுள்ளதுநாம் கடற்கரையை பேணிகாக்கவும் கழல்வாழ் உயிரினங்களின் நீடித்த வாழ்விற்கும் மிகமுக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்றும் அவர் கூறினார். மேலும், இன்று கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இணைந்துள்ளதுமகிழ்ச்சியளிக்கிறது என்றும் தெரிவித்தார்இந்தியா கடற்கரை பாதுகாப்பில் உலக அளவில் முக்கியப்பங்கு வகித்து வருகிறது என்று கூறிய அமைச்சர்இந்தியாவை போன்றே நார்வே, ஆர்டிக் மற்றும்அண்டார்டிக் பெருங்கடல் பகுதியில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறதுபெருங்கடல்கள்பாதுகாப்பில் இந்தியாவும் நார்வேயும் இணைந்து செயல்பட ஆவலுடன் உள்ளதாக அமைச்சர் கூறினார்கடற்கரைகளை சுத்தப்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகளின் மூலம் நேர்மறையான மாற்றங்கள்ஏற்படுவதைக் காண முடிகிறது எனவும், கடற்கரையோரம் வாழும் மீனவர்கள் மற்றும் கடல்வாழ்உயிரினங்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாமல் நீடித்த வாழ்விற்கான இலக்கை நிர்ணயித்துசெயல்பட வேண்டும் என்றும் கடற்கரைப் பாதுகாப்புக் குறித்து சென்னை மட்டுமல்லாமல், இந்தியாவின்அனைத்து கடற்கரை நகரங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய புவி அறிவியல் துறை செயலர் திரு. ரவிச்சந்திரன், தேசிய பெருங்கடலியல்நிறுவன இயக்குநர் திரு. ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.