மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் வழிகாட்டுதலின் கீழ், மக்கள் பங்கேற்பின் ஒரு பகுதியாக, ஜி20, தேசிய கல்வி கொள்கை 2020, அடிப்படை எழுத்தறிவு, எண்ணியல் குறித்த ஒரு நாள் பயிலரங்கம், ஐஐடி சென்னை கேந்திரிய வித்யாலயாவால் வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. கேந்திரிய வித்யாலயா சங்கதன் சென்னை மண்டல துணை ஆணையர் திரு.டி.மணிவாணன் பயிலரங்கை துவக்கி வைத்தார். தேசிய கல்வி கொள்கை 2020யின்படி, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்ளுக்கு வலுவான அடித்தளத்தை வழங்கவும், அவர்களது திறன்களை வளர்க்கவும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என அவர் லியுறுத்தினார். சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலாவின் முதல்வர் டாக்டர் எம்..மாணிக்கசாமி, பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ஆர். பத்மாவதி, சென்னையிலுள்ள கே.வி.பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பல்வேறு துறை பேராசிரியர்கள் உள்பட சுமார் 150 பேர் இதில் கலந்து கொண்டனர்.