சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான காவல்அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் உடல்நலம் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்கள் மேற்கொண்ட மருத்துவசிகிச்சைக்கான தொகையினை தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமைக்காவலர்கள், காவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர் என மொத்தம் 165 காவல்அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து மொத்தம் ரூ.59,00,008/- ஒதுக்கீடுசெய்யப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள், இன்று(14.06.2023) காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்படிமருத்துவ சிகிச்சை தொகை ஒதுக்கீடு பெற்ற 165 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும்அமைச்சுப்பணியாளர்களை நேரில் அழைத்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவசிகிச்சை உதவி தொகை ரூ.59,00,008/- வழங்கினார். மேலும் சென்னை பெருநகர காவல் துறையில் பணியின் போது உயிரிழந்த 11 காவல்ஆளிநர்களின் 18 குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கான கல்வி உதவி தொகைமொத்தம் ரூ.2,56,000/- மற்றும் 10 காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்விஉதவி தொகை ரூ.2,28,550/- வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் J.லோகநாதன், இ.கா.ப., இணை ஆணையாளர் திருமதி.B.சாமூண்டிஸ்வரி, இ.கா.ப, காவல் துணை ஆணையாளர்கள் திரு.S.இராதாகிருஷ்ணன், (தலைமையிடம்), திரு.V.R.சீனிவாசன் (நிர்வாகம்), காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர்கள்குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.