காதணி தண்டட்டி மூலமாக காதலை வெளிபடுத்திய படம் ‘தண்டட்டி’

லஷ்மன் குமார் தயாரிப்பில் ராம்சங்கையா இயக்கத்தில் பசுபதி, ரோகிணி நடிப்பில் வெளிவந்திருக்கும்படம்தண்டட்டி‘. தேனி மாவட்டம் கிடாரிப்பட்டி என்ற கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவிஎடுக்கப்பட்ட காதல் கதை. வயதான பாட்டி ரோகிணியை காணவில்லை என்று பேரனும் ரோகிணியின்மூன்று மகள்களும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள். பாட்டியை கண்டுபிடித்து கொடுக்கஏட்டு பசுபதி கிராமத்துக்கு வருகிறார். ஆனால் ரோகிணிப் பாட்டி இறந்து கிடக்கிறார். பிணமாககிடக்கும் ரோகிணியின் காதில் அணிந்திருக்கும் தண்டட்டியை அபகரிக்க மூன்று மகள்களும் திட்டம்போடுகிறார்கள். ஆனால் அன்றிரவு பிணத்தின் காதில் இருந்த தண்டட்டி களவு போய்விடுகிறது. யார்திருடினார்கள் என்பதை உச்சக்கட்ட காட்சியில் படம் பார்ப்பவர்களின் கண்கள் கலங்கும்படிசொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம்சங்கையா. படம் முழுக்க வரும் பசுபதியின் உணர்ச்சிபூர்வமானநடிப்பு நம்மை வியக்க வைக்கிறது. பழங்காலத்து கிராமத்தை அப்படியே படம்பிடித்து காட்டியிருக்கும்ஒளிப்பதிவாளரும்,  இயக்குநரும் பாராட்டுக்குரியவர்கள்*****