ரூ.69.78 கோடி செலவில் திரு.வி.க. நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள “செங்கை சிவம் பாலம்”, கொளத்தூரில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கௌதமபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.. ஸ்டாலின் அவர்கள் இன்று (1.7.2023) 69 கோடியே 78 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவில் கொளத்தூர், ஜி.கே.எம். காலனியில் உள்ள அரசு மாதிரிமேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டுவாரியத்தின் கௌதமபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் பூங்கா, நூலகக் கட்டடம், ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சி மையக் கட்டடங்கள் மற்றும் திரு.வி..நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ளசெங்கை சிவம் பாலம்ஆகியவற்றை திறந்து  வைத்தார்

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம். காலனி 12-வது தெருவில் உள்ள அரசு மாதிரிமேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அறக்கட்டளையின் நிதியுதவியுடன் 1 கோடிரூபாய் செலவில்  கட்டப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய 3 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களைமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கௌதமபுரம் குடியிருப்பு பகுதி திறந்தவெளிநிலத்தில் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 80.69 இலட்சம் ரூபாய்செலவில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா, மாநிலங்களவை உறுப்பினர் திரு.என்.ஆர். இளங்கோ அவர்களின்பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரமணா நகர், கௌதமபுரத்தில் 40 இலட்சம்ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பகுதி நேர நூலகக் கட்டடம் மற்றும் 74 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய்செலவில் கட்டப்பட்டுள்ள 2 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையக் கட்டடங்கள், என மொத்தம்1 கோடியே 95 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகுதமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி..நகர் மண்டலம், புளியந்தோப்பு மற்றும் பெரம்பூர்பகுதிகளை இணைக்கும் வகையில், ஸ்டீபன்சன் சாலையில் மூலதன மானிய நிதி மற்றும் இதரத்திட்டங்களின் நிதியின் கீழ், 52.90 கோடி ரூபாய் செலவில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கேபழுதடைந்த பழைய பாலத்தை இடித்துவிட்டு, 282 மீட்டர் நீளம் மற்றும் 22.70 மீட்டர் அகலத்தில்கட்டப்பட்டுள்ள புதிய பாலம், 7.13 கோடி ரூபாய் செலவில் 548 மீட்டர் நீளத்தில் பாலத்திற்கான சாலைமற்றும் அணுகு சாலை, மையத்தடுப்பு, இருபுறமும் நடைபாதை, மையத்தடுப்பில் வண்ணப் பூக்களுக்கானசெடிகள் நடுதல் போன்ற பணிகள், 6.8 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகள் என மொத்தம்830 மீட்டர் நீளத்தில் 66 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் இப்புதிய  பாலம்அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இச்சாலையில் தேங்கும் மழைநீர் வடியும் வண்ணம் குக்ஸ் சாலை சந்திப்பிலிருந்துஓட்டேரி நல்லா கால்வாய் வரையிலும், புளியந்தோப்பு பகுதியில் தேங்கும் மழைநீர் வடியும் வண்ணம்டாக்டர் அம்பேத்கர் சாலையிலிருந்து ஓட்டேரி நல்லா கால்வாய் வரையிலும் மழைநீர் கால்வாய்அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்டீபன்சன் சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.. ஸ்டாலின் அவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவம் அவர்களின் நினைவைப்போற்றும் வகையில்செங்கை சிவம் பாலம்என்று பெயர் சூட்டி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காகதிறந்து வைத்தார். இந்தப் பாலம் கட்டப்பட்டதன் மூலம், பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு, புரசைவாக்கம் மற்றும்வேப்பேரி பகுதிகளில் உள்ள 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெரிதும் பயனடைவதோடு, நாள்தோறும் சராசரியாக சுமார் 70 ஆயிரம் வாகன ஓட்டிகள் பயன்பெறுவர்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை  அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகுஇந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னைமாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. கலாநிதி வீராசாமி, திரு. இரா. கிரிராஜன்,          திரு. என்.ஆர். இளங்கோ, சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு. தாயகம் கவி, திரு. ஜோசப் சாமுவேல், துணை மேயர் திரு.மு. மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர்            திரு. . ரங்கநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் மரு. ஜெ. இராதாகிருஷ்ணன், ..., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, ..., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மேலாண்மைஇயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் திரு. எஸ். கிருஷ்ணன், இயக்குநர் திரு. டி.என். நிரஞ்சன்கனி, பொது மேலாளர் திரு. டி. ரமேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.