தென்னை மரத்தினிலே – ஒரு
தேள்கொட்டி விட்டதென்றால்
*பன்னை* மரத்திலங்கே – நெறி
பாங்குறக் கட்டுமென்பார் !
அன்ன விதம்நாட்டில் – உடன்
அரிசி விலையுயர்வால்
எண்ணில் பொருள்விலைகள் – உடன்
எகிறிடும் நிச்சயமாய் !
*எழுபதாம்* ஆண்டுகளில் – அப்போ(து)
ஏறிற்(று) அரிசிவிலை !
பழுதல அஃதெனவே – நினைத்தோர்
பல்பொருள் உயர்விலையைத்
தழுவி யதைக்கண்டே– கொண்ட
தாக்கத்தை என்னென்பேன் !
அழுதனர் அன்றுமக்கள் ! – விடை
அதற்கின்றும் கிடைக்கவில்லை !
இந்த நிலையினிலே – மீண்டும்
ஏறிற் றரிசிவிலை !
அந்தயின் னல்பலவும் – இன்றே
அரவாய்ப் படமெடுக்க
எந்த விதம்அதனை – மக்கள்
ஏற்பார் ; சரிசெய்வார் ?
நொந்தவர் நூலாகி – மன
நோயினுக் காளாவார் !
அரிசி விலையுயர்வை – மக்காள்
அலட்சிய மாக்காதீர் !
பெரிய விலைகளுமே – சிறு/பெரு
பிறபொருளுக் காகிவிடும் !
உரிய வருமானம் – இல்லா
*உடலுழைப்பார்* காணும்
வறிய நிலையதனைச் – சொல்ல
வாயில்லை ; வார்த்தையிலை !
*பாதாசன்*
*அரும்பொருள் விளக்கம் :-*
1. பன்னை : பனை
2. அரவு : பாம்பு