சென்னையில் பதினொன்றாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமும் சென்னை செம்மஞ்சேரி ஆசியவியல் நிறுவனமும் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023, ஜூலை 7,8,9 நாட்களில் சென்னைசெம்மஞ்சேரியிலுள்ள ஆசியவியல் நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளதுஇம்மாநாட்டையொட்டி இன்று சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாநாட்டின்ஏற்பாட்டுக் குழு தலைவர், ஆசியவியல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் பேராசிரியர் ஜி. ஜான்சாமுவேல் பேசுகையில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் நிறுவிய தனிநாயக அடிகளாரின் தலையாயநோக்கம் உலகமெலாம் தமிழோசை பரவல் வேண்டும்  என்பதே என்றும் . அதனை அடியொற்றிஇப்பதினோராம் மாநாட்டுக் கருத்தரங்கின் பொருண்மையாக அமைத்துக்  கொண்டுள்ளது தமிழர்பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்தலாகும் என்றார்.    

அவர் மேலும் கூறியதாவது உலக நாகரிகங்களுக்கெல்லாம் தமிழர் செய்த பங்களிப்பு அரியது  என்பதும்,தமிழகமே உலக நாகரிகங்களின் தொட்டில்என்பதும் இப்போது உறுதியாகியுள்ள நிலையில்செவ்விலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள்), பழந்தமிழர் நாகரிகம், உலகநாகரிகத்திற்குத் தமிழின் பங்களிப்புகள், தற்காலத்து தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்ட ஒன்பதுஆராய்ச்சிப் பிரிவுகளில் இம்மாநாட்டில் 200 பேராளர்கள்  ஆய்வுக்கட்டுரைகள் வழங்கவுள்ளனர்இக்கட்டுரைகள் தவிர இம்மூன்று நாட்களில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மூதறிஞர்கள் தமிழ்த் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்லியல், மொழியியல் சார்ந்த விரிவுரைகளை நிகழ்த்தவுள்ளனர், இந்த மாநாடுதமிழ், தமிழின வரலாறு இன்னும் பல ஆயிரமாண்டுகளுக்கு முந்தையது என்பதை ஆய்வாளர்கள்  மூலமாக மேலும் உறுதிப்படுத்தும் என்றும்  இந்த மாநாட்டில் 20 வெளிநாடுகளிலிருந்து பேராளர்கள்பங்கேற்கின்றனர்ம், பழந்தமிழ் நூல்கள் மற்றும் தமிழிலக்கிய ஆய்வு நூல்கள் இம்மாநாட்டில்வெளியிடப்படுகின்றன என்றும் மேலும் தெரிவித்தார்.   

தமிழின, மொழி, இலக்கிய, பண்பாட்டு வரலாறு உருவாக்கப்படவேண்டும் என்பதேஇம்மாநாட்டுக் கருத்தரங்கம் முன்வைக்கும் பொருண்மையாகும் என்று உலகத் தமிழ் ஆராய்ச்சிமன்றத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.பொன்னவைக்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.   இந்த மாநாட்டில் வழங்கப்பெறும் கட்டுரைகளின் அடிப்படையில் ஆய்வு நூல்களும் பாட நூல்களும்வெளிவருதல் உடனடித் தேவையாகும் என்றார் அவர்இம்மாநாடு வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பம், அறிவியல் உள்ளிட்ட பல தளங்களை இணைத்து தமிழ் மொழி ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. உலகத் தமிழ்ஆராய்ச்சி மன்ற பொதுச்செயலாளர் பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி மன்றத்தின்முதன்மையான நோக்கமான தமிழ் ஆராய்ச்சியின் இன்றியமையாமை குறித்து விளக்கி இந்நாள்வரைநடைபெற்ற பத்து மாநாடுகளின் ஆக்கபூர்வமான வழிமுறைகளில் இம்மாநாடு சென்னையில் நடைபெறும்என்று விளக்கிப் பேசினார்

கலைநிகழ்ச்சிகள், சுற்றுலா ஆகியவற்றுடன் புத்தகக் கண்காட்சியும் இம்மாநாட்டில் இடம்பெறும் என்றுமாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தொடக்க விழா 2023 ஜூலை 7ஆம் தேதி காலை 9 மணிக்குசென்னை செம்மஞ்சேரி ஆசியவியல் நிறுவனத்திலுள்ள சேவியர் தனிநாயகம் அரங்கில் நடைபெறும்முதல் நாள் காலை நடைபெறும் விழாவில் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்மாண்புமிகு  திரு மு.பெ.சாமிநாதன் அவர்கள் நூல்களை வெளியிட்டு தொடக்க உரையாற்றுகிறார். தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகுதிரு.செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கிறார். நாடாளுமன்றஉறுப்பினர்கள் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், முனைவர் சு.வெங்கடேசன், சிறுபான்மையினர் நலஆணையத் தலைவர் திரு.எஸ். பீட்டர் அல்போன்ஸ், புதுச்சேரி பேராசிரியர் முனைவர் டொமினிக் குடால்ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்ற தலைவர் பேராசிரியர் முனைவர்பொன்னவைக்கோ வரவேற்புரை நிகழ்த்த, ஆசியவியல் நிறுவன இயக்குனர் பேராசிரியர் முனைவர்ஜி.ஜான் சாமுவேல் மாநாட்டின் நோக்கவுரை ஆற்றுகிறார்மன்றத் துணைத்தலைவர் பேராசிரியர்முனைவர் சுந்தரமூர்த்தி நன்றியுரை வழங்குவார்

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும் அமெரிக்கத்தமிழறிஞருமான திரு. அரசர் அருளாளர், தமிழறிஞர் திரு. இரவி பாலா, உலகத் தமிழ் ஆராய்ச்சிமன்ற பொதுச்செயலாளர் பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி, மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்பேராசிரியர் முனைவர் பெ.அர்தநாரீஸ்வரன், மாநாட்டு ஊடகவியலாளர் கவிஞர் விஜயகிருஷ்ணன்ஆகியோர் உடன் இருந்தனர்

பேராசிரியர் முனைவர் மு. பொன்னவைக்கோ 

தலைவர் 

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் 

பேராசிரியர் முனைவர் உலகநாயகி பழனி,

பொதுச் செயலாளர்

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் 

பேராசிரியர் முனைவர் ஜி.சாமுவேல்

நிறுவனர், இயக்குநர் ,

ஆசியவியல் நிறுவனம், சென்னை