மென்பனி கம்பெனி தயாரிப்பில் சாய் கார்த்திக் இயக்கத்தில் நட்டி நடராஜன், வித்யா பிரதீப், முனீஸ்காந்த் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘இன்பினிட்டி‘. சென்னையில் ஆங்காங்கேகொலைகள் நடக்கிறது. இதை கண்டுபிடிக்க மத்திய குற்றப்பிரிவு அதிகாரியான நட்டி நடராஜ்சென்னைக்கு வருகிறார். கொலை நடந்த இடங்களை ஆய்வு செய்கிறார். எதற்காக? யார் கொலைசெய்கிறார்கள். என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை. மாற்று அறுவை சிகிச்சைக்காக மனிதஉறுப்புகளை சட்டரீதியாக பெறுவார்கள். மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புக்களை தானமாகவும்பெறுவார்கள். இது இப்போது வணிகமாக மாறியதால் மனித உறுப்புகள் கடத்தல் பொருளாகமாறிவிட்டது. இதற்காக சமூக விரோதிகள் பலரை கடத்தி கொலை செய்து உறுப்புகளை எடுத்துவிற்பனை செய்வது போல் பல படங்கள் வந்துவிட்டன. ஆனால் இந்த படத்தில் இழந்த இளமையின்சக்தியை மீண்டும் பெற மனித உறுப்புகளை யாரிடமிருந்து எடுக்க வேண்டும் என்பதை விபரீதகற்பனையில் படத்தை உறுவாக்கியுள்ளார்கள். துப்பறிவதில் நட்டி நடராஜின் வேகம் அபாரம்.