சென்னை பெருநகர காவல் ஆணையாளர் “பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்” பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் காவல் ஆணையரகங்கள்மற்றும் காவல் மாவட்டங்களில் காவல் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் குறைதீர்முகாம்கள் நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைஎடுக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி சென்னை பெருநகரில் வசிக்கும்பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கபொதுமக்கள் மெகா குறைதீர் முகாம் நடத்த சென்னை பெருநகர காவல்ஆணையாளர் திரு.சந்திப் ராய் ராத்தோட், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில்ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

அதன்படி இன்று (08.07.2023) சனிக்கிழமை பகல் 12.00 மணியளவில்சென்னை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ராத்தோட், இ.கா.ப., அவர்கள், கீழ்ப்பாக்கம், துணை ஆணையாளர் அலுவல வளாகத்தில்நடந்த பொதுமக்கள் மெகா குறை தீர் முகாமில் கலந்து கொண்டு பொதுமக்களைநேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து குறைதீர் மனுக்களைபெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதே போல, இன்று (08.07.2023) காலை 9.30 மணி முதல் சென்னை பெருநகரகாவல் எல்லையில் உள்ள பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணாநகர், கொளத்தூர், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், அடையார், தி.நகர் மற்றும் புனித தோமையர் மலை ஆகிய 12 காவல்மாவட்டங்களிலும் அந்தந்த காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையில்பொதுமக்கள் மெகா குறை தீர் முகாம் நடத்தி பொதுமக்களை நேரில் சந்தித்து 641ஆண்கள் 361 பெண்கள் என மொத்தம் 1,002 குறைதீர் மனுக்களை பெற்று இதில் 618மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.