சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவது குறித்து தனியார் ஆம்னி பேருந்து சங்க உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (10.7.2023) சென்னைப்  பெருநகர் வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமஅமைச்சர் () தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு. அவர்கள் தலைமையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவது குறித்துதனியார் ஆம்னி பேருந்து சங்க உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டமும் மற்றும் அப்பணிகளுடன்சேர்ந்து நடைபெற்று வரும் இதரப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் போக்குவரத்து நெரிசலின்றிசெல்வதற்காக சாலை அமைக்கும் பணிகளாக வண்டலூர்கேளம்பாக்கம் சாலைஇணைக்கும் போலீஸ்அகாடமி சாலைநல்லம்பாக்கம் சாலைஊனமஞ்சேரி வழியாகஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலைஅமைக்கும் பணி, சி.வி.கே. சாலைஊரப்பாக்கம்நல்லம்பாக்கம் சாலை வழி ஊனமாஞ்சேரி வரைதார்சாலை அமைக்கும் பணி, நல்லம்பாக்கம் சாலையில் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பு மேம்பாடு அமைக்கும் பணி, கூடுவாஞ்சேரிமாடம்பாக்கம் சாலையில் பாதுகாப்பு தளவாடங்கள் அமைக்கும் பணி, சாலை வளைவுகளைவிரிவுபடுத்துதல் & ஆதனூர்ஹரிஜன் காலனி சாலைடிடிசி பணியாளர் காலனி சாலை (ODR)  வழியாகமாடம்பாக்கம் வரை சாலை அமைக்கும் பணி மற்றும் வண்டலூர்வாலாஜாபாத் சாலை மற்றும் மாடம்பாக்கம்யூனியன் சாலை அமைக்கும் பணி ஆகிய 6 எண்ணிக்கையிலான நெடுஞ்சாலைத்துறை பணிகள் அனைத்தும்15.09.2023 க்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென மாண்புமிகு அமைச்சர் அவர்கள்உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா..., அவர்கள், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சூல் மிஸ்ரா ..., அவர்கள், மாநகரப் பேருந்துக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.அன்பு ஆபிரகாம் அவர்கள், சி.எம்.டி.. தலைமைத் திட்ட அமைப்பாளர்கள், அரசு விரைவு பேருந்து போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.