அந்தமான் நிகோபார் கட்டளை தளத்திற்கு 
முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம்

முப்படைகளின் தலைமைத் தளபதி (சிடிஎஸ்) ஜெனரல் அனில் சௌஹான், 2 நாள் பயணமாக போர்ட்பிளேயருக்கு 09ந்தேதி வந்தடைந்தார்அவரை அந்தமான் & நிக்கோபார் மண்டல தளபதி ஏர் மார்ஷல் சாஜுபாலகிருஷ்ணன் வரவேற்றார்.

இந்தப் பயணத்தின் போது, சிடிஎஸ்சுக்கு இந்தியாவின் ஒரே செயல்பாட்டு கூட்டு சேவைகள் மற்றும் சவால்கள்பற்றி விரிவான விளக்கமளிக்கப்பட்டது. தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அந்தமான் நிக்கோபார் தளம் ஆற்றியமுக்கியப் பங்கை தளபதி வலியுறுத்தினார். அந்தமான் மற்றும் நிக்கோபார் தளம், பிரதமரின் தொலைநோக்குப்பார்வையுடன்அரசின் கிழக்கு நோக்கிய  கொள்கையை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளது.

09- ந்தேதி அன்று, சி.டி.எஸ் கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் மையத்துக்கு சென்று பார்வையிட்டார்அதில் புதிதாக கட்டப்பட்ட வெட் பேசின் மற்றும் ரிஃபிட் ஜெட்டியை அவர் திறந்து வைத்தார். இந்த அதிநவீனதிட்டமானது, அலுவலக இடங்கள் மற்றும் துருப்புக்களுக்கான தங்குமிடங்களுடன், தாழ்வான பெட்டிகளுடன்கூடிய புதுமையான ஜெட்டியைக் கொண்டுள்ளது. இந்த வசதியின் தொடக்கமானது அந்தாமான் நிக்கோபார்தளத்தின் (ஏஎன்சி) மறுசீரமைப்பு திறனை கணிசமாக மேம்படுத்துவதுடன், தேசிய பாதுகாப்புத் திறன்களைமேலும் வலுப்படுத்துகிறது. துருப்புக்களுடனான கலந்துரையாடலின் போது தேசிய நலன்களைப்பாதுகாப்பதில் ஏஎன்சி பணியாளர்களின் அர்ப்பணிப்பு முயற்சிகளுக்கு ஜெனரல் சௌஹான் தனதுபாராட்டுகளைத் தெரிவித்தார்.

ஜெனரல் அனில் சௌஹான், ஏர் மார்ஷல் சஜு பாலகிருஷ்ணனுடன், ஏஎன்சியின் வடக்குப் பகுதியின்செயல்பாட்டுத் தயார்நிலையை ஆய்வு செய்தார். ஐஎன்எஸ் கொஹாஸ்ஸாவில் , வடக்கு குழு தீவுகளின்பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து அவருக்கு  தெரிவிக்கப்பட்டதுஇது வலுவான பாதுகாப்பு நிலைப்பாட்டைபராமரிப்பதில் தளத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

ஐஎன்எஸ் கொஹாஸ்ஸாவில் இருந்து, ஐஎன்எஸ் உத்க்ரோஸ்சில்   பல விமானங்களைத் தாங்கும் திறன்கொண்ட அதிநவீன தளத்தைத் திறந்து வைத்தார். இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில்துருப்புக்களின் அர்ப்பணிப்பு, அசைக்க முடியாத உறுதி  ஆகியவற்றை ஜெனரல் சௌஹான் பாராட்டினார்.