வேலூர், காட்பாடியில் “தம்பி பிரியாணி” என்ற பிரியாணி கடை புதிதாக நேற்று திறக்கப்பட்டு, மட்டன்பிரியாணி வாங்கினால் சிக்கன் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்ததால், அங்குபொதுமக்கள் கூட்டம் அலைமோதி, நீண்ட வரிசையில் வெயிலில் வெகுநேரமாக காத்திருந்த சம்பவம்அதிர்ச்சியளிக்கிறது. புதிய கடைகள் திறப்பின் போது, சலுகைகள் வழங்குவது வழக்கம். ஆனால், பிரியாணி இலவசம் என்பதற்காக காட்பாடி முதல் வேலூர் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் அளவிற்கு மக்கள் கூட்டம்அலைமோதியது என்றால் மக்களின் இலவச மோகத்தை சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.
கூட்டத்தை கண்ட வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சியில் தொழில் உரிமம் பெறாமல்துவங்கப்பட்டதாக தெரிவித்து கடையை மூடச் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம், பொதுமக்களைவலுக்கட்டாயமாக கலைந்து செல்லச் செய்யும் சூழல் காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால்மக்களின் மனநிலை, இலவசத்தின் மீதான ஆர்வம், கலெக்டர் வருகை புரிந்து கூட்டத்தை கலைந்து செல்லகடையை மூட முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அனைத்தும் தலைகுனிவான செயல். கடை உரிமம் பெற்று திறக்கப்பட்டதா? பிரியாணி சுவையானதாக இருக்குமா? சுகாதாரமான முறையில்தயாரிக்கப்படுகிறதா? என்றெல்லாம் பாராமல் நீண்ட வரிசையில் தயங்காமல் காத்திருந்து பெறலாம் என்றால்அந்த இலவசத்தில் இருக்கும் மோகம் என்ன? பொதுமக்கள் என்னிடம் கேட்கலாம், உங்களுக்கென்ன வசதியுடன் வாழ்கிறீர்கள், இலவசம் உங்களுக்குதேவையல்ல, எங்களின் தேவை என்று கூறலாம். ஆனால், அப்படியல்ல, தன்மானத்தை இழந்து கிடைக்கும் இலவசம் பெறுவது சரியல்ல. நாம் உழைத்து, கடின உழைப்பால், முயற்சியால் ஈட்டுகின்ற பொருளைக் கொண்டு உண்ணுகின்ற உணவு தான் சிறப்பு என்று சிந்திப்பவன் என்பதால் இதனை தெரிவிக்கிறேன். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு அரசு நலத்திட்டப்பணிகள் வாயிலாக தேவைகள் பூர்த்தி அடையும். ஆனால், அனைவரும் இலவசத்திற்காக் இப்படி நின்றதை பார்த்து பெரும் தலைகுனிவாக எண்ணி வருந்துகிறேன். தன்மானத்தை இழந்து, சுயமரியாதை விடுத்து கிடைக்கும் அத்தியாவசியமற்ற இலவசத்தை இனியாவது தவிர்த்திடுங்கள்.